»   »  பைரவாவில் 'பன்ச் டயலாக்' எதுவும் வச்சிராதீங்க பரதா: விஜய் கறார் #bairavaa

பைரவாவில் 'பன்ச் டயலாக்' எதுவும் வச்சிராதீங்க பரதா: விஜய் கறார் #bairavaa

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படத்தில் பன்ச் வசனம் எதுவும் இருக்கக் கூடாது என்று விஜய் இயக்குனர் பரதனிடம் தெரிவித்துள்ளாராம்.

பரதன் இயக்கத்தில் விஜய் பைரவா படத்தில் நடித்து வருகிறார். விஜய்யை வைத்து அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியவர் தான் இந்த பரதன். பைரவா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.

தெறி

தெறி

தெறி படத்தில் தான் விஜய் பன்ச் வசனம் எதுவும் பேசாமல் அடக்கி வாசித்தார். இந்நிலையில் பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் தளபதி இம்முறை நிச்சயம் பன்ச் வசனம் பேசி தெறிக்கவிடுவார் என்று நினைத்தார்கள்.

பன்ச் வசனம்

பன்ச் வசனம்

பைரவா படத்தில் பன்ச் வசனம் எதுவும் வச்சிராதீங்க பரதன் என்று விஜய் கறாராக தெரிவித்துவிட்டாராம். பன்ச் வசனம் இல்லாவிட்டாலும் தியேட்டர்களில் விசில் பறக்கும்படி பல வசனங்களை வைத்துள்ளாராம் பரதன்.

பைரவா

பைரவா

விஜய் 60 என்று அழைக்கப்பட்டு வந்த படத்தின் தலைப்பு பைரவா என விநாயகர் சதுர்த்தி அன்று தான் அறிவிக்கப்பட்டது. பெரிய தலைப்பு வேண்டாம் நச்சுனு ஒரு வார்த்தையில் தலைப்பை வைக்குமாறு விஜய் தான் பரதனிடம் கேட்டுக் கொண்டாராம்.

புகைப்படம்

புகைப்படம்

படப்பிடிப்பில் யாரும் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று விஜய் கன்டிஷன் போட்டுள்ளாராம். அப்படி புகைப்படம் எடுத்து அது வெளியானால் படத்தின் எதிர்பார்ப்பு குறைந்துவிடும் என்று நினைக்கிறார் விஜய்.

English summary
It is told that Vijay has requested Bairavaa director Bharathan to avoid punch dialogues in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil