»   »  செல்பி புள்ளயும் குல்பி புள்ளயும்...- தெறி விழாவில் விஜய் பேச்சு

செல்பி புள்ளயும் குல்பி புள்ளயும்...- தெறி விழாவில் விஜய் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

புலி படத்தால் துவண்டு போயிருந்த விஜய் ரசிகர்கள், தெறி டிசைன்களைப் பார்த்து ரொம்பவே உற்சாகமாகிவிட்டனர்.

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கிடையில் படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை சத்யம் அரங்கில் நடந்தது.


Vijay's speech in Theri audio launch

நாயகி சமந்தா காய்ச்சல் காரணமாக விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவரைத் தவிர மற்ற எல்லாருமே விழாவில் ஆஜர்!


இந்த விழாவில் விஜய் பேசுகையில், "இதுநாள் வரை ஜி.வி.பிரகாஷின் ஸ்டுடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த ‘தெறி' படத்தின் பாடல்கள் இன்று உலகம் முழுவதும் தெறித்து கொண்டிருக்கிறது.


‘ராஜாராணி' என்கிற ஒரு அழகான காதல் படத்தை கொடுத்த அட்லி, என்னை வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை கொடுக்க வேண்டும் என்ற வெறிதான் இந்த ‘தெறி'. அவர் இந்த வயதில் எட்டியிருக்கும் உயரம் மிகவும் பெரியது.


இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒன்று செல்பி புள்ள, மற்றொன்று குல்பி புள்ள. இதில் யாருக்கு முக்கியத்துவம் என்று கேட்டால், இரண்டு பேருக்குமேதான். மீனாவின் மகள் நானிகா இந்த படத்தில் எனக்கு மகளாக நடித்திருக்கிறார்.


இயக்குநர்களின் ஹீரோ மகேந்திரனுக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம். ‘உதிரிப்பூக்கள்' என்ற படத்தை கொடுத்து மக்கள் மனதில் உதிரமால் இருக்கும் இவருடைய படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. ஆனால், என்னுடைய படத்தில் அவர் நடித்தது பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.


என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் பல்வேறு உயரங்களைத் தொடவேண்டும் என்பதுதான் என்னுடைய நீண்டநாள் ஆசை. அடுத்தவர்கள் தொட்ட உயரங்களை உங்களது இலக்காக எடுத்துக் கொள்ளாமல், நீங்கள் தொட்ட உயரங்களை மற்றவர்களுக்கு இலக்காக அமையுங்கள்.


நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தில் ஒரு பெரிய உயரத்தை தொடவேண்டும். உங்கள் வாழ்க்கையில் கர்வங்களை விட்டு வாழ கற்றுக்கொள்ளுங்கள்," என்றார்.

English summary
In Theri even, actor Vijay advised his fans to set a new goals to others by achieving great things.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil