»   »  பீட்டா... நோ பீட்டா! - நடிகர் விஜய்யின் வைரல் ஆடியோ

பீட்டா... நோ பீட்டா! - நடிகர் விஜய்யின் வைரல் ஆடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பீட்டா அமைப்பை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நடிகர் விஜய் ட்விட்டரில் வெளியிட்ட ஆடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

Vijay's voice against PETa going viral

இந்த நிலையில் நடிகர் விஜய் அனுப்பியுள்ள ஆடியோ பதிவில், "உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களின் கலாசாரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கவே தவிர பறிப்பதற்காக அல்ல. தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பாக்காமல் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் கட்சி பேதமின்றி தமிழன் என்கிற ஒரே உணர்வுடன் போராட்டத்தில் குதித்துள்ள அத்தனை இளைஞர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரையும் வெளியே அனுப்'பீட்டா' நான் சந்தோஷப்படுவேன். இத்தனை பிரச்னைக்கும் காரணமாக இருப்பவர்களை நாட்டை விட்டே அனுப்'பீட்டா' தமிழகம் சந்தோஷப்படும்," என அவர் கூறியுள்ளார்.

பீட்டா என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி உச்சரித்து, பீட்டா தன் சொந்த நாட்டோடு நிற்கட்டும் என வலியுறுத்தியுள்ளார் விஜய். இந்த ஆடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வாய்ஸுக்காக விஜய்க்கு அனைத்து ரசிகர்களிடமிருந்தும் பாராட்டுகளும் குவிகின்றன.

English summary
Vijay's voice against the ban on Jallikkattu and PETA is going viral in social network.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil