இந்தியில் ரீமேக்காகும் 96 படம்.. பாலிவுட் தயாரிப்பாளருக்கு வாழ்த்து சொன்ன விஜய் சேதுபதி!

சென்னை: விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 96. இந்த படத்தை சி பிரேம்குமார் எழுதி இயக்கியிருந்தார்.

இந்த படத்தை மெட்ராஸ் எண்டெர்பிரைஸஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

ஜானு கதாப்பாத்திரம்

ஜானு கதாப்பாத்திரம்

இந்தப் படத்தில் ராமச்சந்திரன் என்ற கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியும் ஜானகி தேவி என்ற கதாப்பாத்திரத்தில் த்ரிஷாவும் லீடிங் ரோலில் நடித்திருந்தனர். பள்ளி பருவ காதல், நட்பு என ஒவ்வொரு மனிதரும் கடந்து வரும் பாதையை அத்தனை அழகாக படம் பிடித்து காட்டியிருப்பார்கள்.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

ஆதித்யா பாஸ்கர் பள்ளி பருவ விஜய் சேதுபதியாகவும், கவுரி கிஷன் பள்ளி பருவ த்ரிஷாவாகவும் நடித்திருந்தனர். மேலும் தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள், கவிதாலயா கிருஷ்ணன், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தெலுங்கு கன்னடத்தில் ரீமேக்

தெலுங்கு கன்னடத்தில் ரீமேக்

இந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு பாடகி சின்மயி பின்னணி குரல் கொடுத்திருந்தார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். இந்தப் படம் வசூலையும் குவித்தது. இந்தப் படம் ஏராளமான விருதுகளையும் பெற்றது. தமிழில் பெரும் ஹிட்டான இப்படம் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தெலுங்கில் ஜானு

தெலுங்கில் ஜானு

கன்னட மொழியில் 99 என்றும் தெலுங்கில் ஜானு என்றும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் 96 படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதன்படி இப்படத்தின் இந்தி ரீமேக்கை அஜய் கபூர் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

இந்தியில் ரீமேக்

இந்தியில் ரீமேக்

மேலும் அஜய் கபூருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இப்படத்தை இயக்கப்போவது யார்? யார் யார் என்னென்ன கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழில் வெளியான பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படும் நிலையில் 96 படத்தின் ரீமேக் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X