»   »  2016 ல் 6 படங்கள் விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி!

2016 ல் 6 படங்கள் விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2016 ம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் சுமார் 6 படங்கள் வெளியாக இருக்கின்றன.இதனால் தற்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் விஜய் சேதுபதி.

சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் மெல்லிசை, கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் இறைவி மற்றும் நலன் குமாரசாமியின் காதலும் கடந்து போகும் ஆகிய படங்கள் முழுமையாக முடிந்து வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன.

Vijay Sethupathi's More than 6 Films Release for Next Year

மேலும் அருண்குமாரின் இயக்கத்தில் உருவான சேதுபதி திரைப்படமும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதைத் தவிர சீனு ராமசாமியின் இயக்கத்தில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் தர்மதுரையும் அடுத்த ஆண்டில் திரைக்கு வந்து விடும்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அடுத்த ஆண்டு முழுவதும் விஜய் சேதுபதியின் ஆண்டாகவே இருக்கும் என்று தெரிகிறது. இதைத் தவிர வா டீல் இயக்குனர் சிவஞானத்தின் புதிய படம் ஒன்றிலும் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

இதைத்தவிர மேலும் புதிய படங்களில் விஜய் சேதுபதி நடித்து அந்தப் படமும் வெளியாகும் வாய்ப்புகள் இருப்பதால் அடுத்த ஆண்டு விஜய் சேதுபதிக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக அமையும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

நானும் ரவுடிதான் படம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கும் விஜய் சேதுபதி, வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வாரா?இதற்கான விடை அடுத்த ஆண்டில் தெரியவரும்.

English summary
Vijay Sethupathi's Idam Porul Eval, Mellisai,Kadhalum Kadanthu Pogum, Sethupathi, Iraivi and Dharma Durai More Than 6 Films may be Release on next Year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil