»   »  முதல்முறையாக கேவி ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி!

முதல்முறையாக கேவி ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல் முறையாக கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் விஜய் சேதுபதி.

கேவி ஆனந்த் கடைசியாக இயக்கிய படம் அனேகன். தனுஷ் - அமைரா தஸ்தூர் நடித்த இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.

இப்படத்திற்கு பிறகு ஆனந்த் இயக்கத்தில் அஜீத், விஜய், ஆர்யா, ஜீவா என பல நாயகர்கள் பெயர் அடிபட்டது.

Vijay Sethupathy signs next movie with KV Anand

ஆனால் இந்த செய்திகள் உறுதியாக நிலையில், தற்போது புதியதாக விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் நானும் ரவுடிதான், சேதுபதி படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்த நிலையில், நாளை காதலும் கடந்து போகும் படம் வெளியாகிறது.
அடுத்து வரிசையாக இறைவி, மெல்லிசை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.

இந்த நிலையில் கேவி ஆனந்த் சொன்ன ஒரு கதை மிகவும் பிடித்துவிட்டதால் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கேவி ஆனந்த் இயக்கிய மாற்றான், அனேகனையும் ஏஜிஎஸ்தான் தயாரித்தது.

English summary
Vijay Sethupathy is joining hands with director KV Anand for a new movie produced by AGS productions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil