twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழிசைக்கும், ராஜாவுக்கும் நன்றின்னு நேரடியாகவே சொல்லியிருக்கலாமே விஜய்

    By Siva
    |

    சென்னை: அறிக்கையில் நேரடியாக தமிழிசை, ராஜாவுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கலாமே விஜய் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    சுமாரான ஹிட்டாக வேண்டிய மெர்சல் படத்தை பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் சேர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டனர்.

    விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய ஹிட் படம் மெர்சல் தான்.

    விஜய்

    விஜய்

    ஹெச். ராஜா விஜய்யை ஜோசப் விஜய் என்று கூறி மதத்தை இழுத்து வம்பிழுத்தார். இந்நிலையில் படம் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட விஜய் தனது பெயரை ஜோசப் விஜய் என்றே போட்டிருந்தார்.

    ராஜா

    ராஜா

    ஜோசப் விஜய்னா எங்கள் தளபதியை வம்பிழுக்கிறீர்கள். பார்த்தீர்கள்ல அறிக்கையில் எங்க அண்ணா ஜோசப் விஜய்ன்னு தில்லா போட்டு நெத்தியடி கொடுத்தார் என்று ரசிகர்கள் பெருமையாக கூறுகிறார்கள்.

    தமிழிசை

    தமிழிசை

    மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்ததற்கும், அனைவருக்கும் நன்றி என்று விஜய் அறிக்கையில் சொல்லியிருப்பது தமிழிசை மற்றும் ஹெச். ராஜாவை தான்.

    நேரடி

    நேரடி

    அனைவருக்கும் என்று சொல்வதற்கு பதில் மெர்சல் மாபெரும் வெற்றி பெற அரும்பாடு பட்ட தமிழிசை மற்றும் ராஜா அவர்களுக்கு நன்றி என்று நேரடியாகவே சொல்லியிருக்கலாமே விஜய் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Fans said that Vijay should have mentioned BJP leaders Tamilisai Soundararajan and H. Raja's names in his statement and thanked them directly for making Mersal a super hit.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X