»   »  இந்தப் பிறந்த நாளைக்கு சென்னையிலேயே இல்லையாம் விஜய்!

இந்தப் பிறந்த நாளைக்கு சென்னையிலேயே இல்லையாம் விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில ஆண்டுகளாக தனது பிறந்த நாளை பகிரங்கமாகக் கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் விஜய்.

காரணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.

இந்த ஆண்டும் ஜூன் 22-ம் தேதியன்று அவரால் தமிழ் நாட்டில் பிறந்த நாள் கொண்டாட முடியாத நிலை. தனது ரசிகர்களையும் அடக்கியே வாசிக்கும்படி அறிவுறுத்திவிட்டாராம். ஆனால் அதைக் கேட்கும் நிலையில் இல்லை விஜய் ரசிகர்கள்.

Vijay to skip his birthday celebrations

ஆங்காங்கே விஜய் மக்கள் இயக்கக் கிளைகளைத் தொடங்கி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் தொடங்கியுள்ளனர்.

இதனால் மேலும் ஏதாவது சிக்கல் வருமோ என்ற யோசனை ஒரு பக்கம். எதற்கு வம்பு, பேசாமல் ஷூட்டிங்கில் இருந்தால் தொல்லை இருக்காதே என்ற நினைப்பில், ஹைதராபாதுக்கு கிளம்ப முடிவு செய்துள்ளாராம்.

பரதன் இயக்கும் இன்னமும் பெயரிடப்படாத படத்தில் பங்கேற்று, அங்கேயே அமைதியாக பிரியாணி விருந்து வைத்து பிறந்த நாள் கொண்டாடப் போகிறாராம் விஜய்.

English summary
Vijay is planning to skip his birthday celebrations on June 22 and will attend his 60th movie shooting at Hyderabad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil