»   »  விஜய் கொண்டாடும் கமல் பிறந்த நாள்

விஜய் கொண்டாடும் கமல் பிறந்த நாள்

Subscribe to Oneindia Tamil
Click here for more images
கலைஞானி கமல்ஹாசனின் பிறந்த நாளை விஜய் டிவி வித்தியாசமான கவியரங்கத்துடன் கொண்டாடுகிறது. இதுதவிர பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் அது ஏற்பாடு செய்துள்ளது.

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் வருகிறது. 3 முறை தேசிய விருதுகளையும், ஏராளமான பிலிம்பேர் விருதுகளையும், இன்னும் பல சிறப்புகளையும் பெற்று, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன் 40 ஆண்டுகளாக திரையுலகில் சாதனைகள் பலவற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறார்.

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நடிகராக அறிமுகமாகி தசாவதாரம் வரை பல்வேறு அவதாரங்களை எடுத்து சாதனை படைத்துள்ள கமல்ஹாசன், நடிகராக மட்டுமல்லாமல், பாடகராக, பாடலாசிரியராக, கதாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குநராக பன்முகம் கொண்ட திறமையாளர்.

கமல்ஹாசனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் வழக்கம் போல நலத் திட்ட உதவிகளை வழங்கியும், ரத்ததானம் உள்ளிட்ட சேவைகளிலும் ஈடுபட்டு சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்த் தொலைக்காட்சிகளிலேயே படு வித்தியாசமான விஜய் டிவியும் கமல் பிறந்த நாளையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சகலகலாவல்லவன் என்ற பெயரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை விஜய் டிவி தயாரித்துள்ளது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு தனது திரையுலக வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார், மறக்க முடியாத சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசவுள்ளார்.

திரையுலகைச் சேர்ந்தவர்களும், பிற நண்பர்களும் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் இந்த நிகழ்ச்சியில் கூறவுள்ளனர். மேலும் விஜய் டிவி பார்வையாளர்களும், கமல் ஹாசன் ரசிகர்களும் கூட தங்களது வாழ்த்துக்களை இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர மதன்ஸ் திரைப்பார்வை நிகழ்ச்சியில் ஒரு மாத காலத்திற்கு கமல்ஹாசனின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளது. இந்திய சினிமாவுக்கு கமல்ஹாசன் ஆற்றிய பங்கு குறித்து இந்த நிகழ்ச்சியில் மதன் அலசவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் பங்கேற்கும் விவாதமும் இடம் பெறுகிறது.

இதுதவிர கமல்ஹாசனின் மிகப் பெரிய ரசிகர் யார் என்ற போட்டிக்கும் விஜய் டிவி ஏற்பாடு செய்துள்ளது. இதில் கமல்ஹாசன் குறித்த 200 கேள்விகளுக்கு விஜய் டிவி ரசிகர்கள் பதிலளிக்க வேண்டும். இதில் 100 கேள்விகளுக்கு சரியான பதில் தருவோருக்கு கமல்ஹாசனின் மிகப் பெரிய ரசிகர் என்ற பட்டம் தரப்படும். இதை வெல்வோருக்கு மிகப் பெரிய பரிசுகளும் காத்துள்ளன.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் (பி.எஸ்.என்.எல். போனில் பேசுவதாக இருந்தால்) 12782727 என்ற எண்ணிலும், மற்றவர்கள் 505782727 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

கமல் கவியரங்கம்:

முத்தாய்ப்பாக, கமல் கவியரங்கம் என்ற பெயரில் கவியரங்க நிகழ்ச்சிக்கும் விஜய் டிவி ஏற்பாடு செய்துள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு சென்னை தி.நகர், வாணி மஹாலில் இந்த கவியரங்கம் நடைபெறுகிறது.

முனைவர் கு.ஞானசம்பந்தன் தொகுப்புரை நிகழ்த்துகிறார். இந்த கவியரங்கத்தில் மனுஷ்யபுத்திரன், கபிலன், விவேகா, நா.முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்று கவி பாடவுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil