»   »  மாவோ ரஷ்ய அதிபரா.. சீனத் தலைவரா... கன்பியூஸ் ஆன விஜய்!

மாவோ ரஷ்ய அதிபரா.. சீனத் தலைவரா... கன்பியூஸ் ஆன விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம் மேடை ஏறினால் நாலு வார்த்தை பேசிவிட்டு சட்டென்று இறங்கிவிடுவார் விஜய்.

ஆனால் ஒரு கட்டத்தில் மைக்கைப் பிடித்ததும் குட்டிக் கதைகள் சொல்ல ஆரம்பித்தவர், இப்போதும் தொடர்கிறார்.


கதை சொல்வதோ, அதிக நேரம் பேசிவதோ தப்பில்லை. ஆனால் தப்பில்லாமல் பேச வேண்டும் அல்லவா...


Vijay wrongly mentioned Mao as Russian President

நேற்று நடந்த தெறி இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன இன்னொரு குட்டிக் கதை. இது...


"ரஷ்ய முன்னாள் அதிபர் மாவோ சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது, ஒரு சின்ன பையன் தலைவர்கள் படத்தை வைத்து விற்றுக்கொண்டிருக்கிறான். அந்தப் பையன் வச்சிருந்த எல்லாப் படமும் மாவோ படமாகவே இருந்துச்சி.


உடனே மாவோ, கர்வத்தோட அந்த சின்னப் பையனைக் கூப்பிட்டு, 'என்ன தான் என் மேல பாசம் இருந்தாலும், மற்ற தலைவர்களோட படத்தையும் சேர்த்து விக்கணும்'னு சொல்லிருக்காரு. உடனே அந்தப் பையன் சொல்லிருக்கான், மற்ற தலைவர்கள் படமெல்லாம் வித்துப்போயிடுச்சி, உங்க படம் தான் இன்னும் விக்கலை'ன்னு.


என் ரசிகர்களாகிய நீங்களும் கர்வமில்லாம இருந்தா மட்டும் தான் பெரிய உயரத்தை அடையமுடியும்".


இதைக் கேட்டதும், அரங்கிலிருந்த பலரும் 'மாவோ ரஷ்யத் தலைவரா, சீனத் தலைவரா... பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு' என்று காவலன் பட வடிவேலு பாணியில் கமெண்ட் அடித்தனர். நிகழ்ச்சியை ஒளிபரப்பப் போகிற சேனலாவது, அதை எடிட் பண்ணிட்டுப் போடறாங்களா பாப்போம்!


இதற்கிடையில் விஜய்யின் இந்த 'டங் ஸ்லிப்' குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், "எல்லோரும் கூர்ந்து கவனிக்கக்கூடிய இடத்தில் இருக்கும் விஜய் கவனமாக இருக்க வேண்டாமா? சைனாவின் பிரபல தலைவர் மாவோவை ரஷ்ய நாட்டுத் தலைவர் என சொல்வது சரியா? உங்களுக்கான பேச்சை தயார் செய்பவர்களைக் கொஞ்சம் கவனமாக இருக்கச் சொல்லுங்கள். இல்லை, நீங்களேதான் தயார் செய்தீர்களென்றால் இன்னும் நிறைய கவனமாகப் படியுங்கள் விஜய்," என்று கூறியுள்ளார்.

Read more about: vijay, theri, விஜய், தெறி
English summary
Actor Vijay has wrongly mentioned Communist leader Mao as Russian President in his Theri event speech.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil