»   »  ஐஸ்வர்யாராய்க்கு "குறி வைக்கும் விஜய் கோலிவுட்டில் ரஜினிக்கு அடுத்த இடத்தைப் பிடித்து விட்ட மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் விஜய், முன்னாள் உலகஅழகி ஐஸ்வர்யாராய்க்கு குறி வைத்துள்ளார். தனது அடுத்த படத்தில் எப்படியாவது "ஐஸை நடிக்க வைத்து விட வேண்டும் என்ற முடிவுடன் உள்ளார் அவர்.கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு விஜய் தான் என்று சொல்லி விடலாம். இதற்குகாரணம் இல்லாமல் இல்லை. திருமலை, கில்லி, அதற்கு அடுத்து வந்த திருப்பாச்சி ஆகிய படங்களுக்குப் பிறகு இவரதுமார்க்கெட் எங்கேயோ போய்விட்டது.ஒரு படம் முடிவதற்குள் அடுத்து இரண்டு படங்களுக்கான அறிவிப்பு, பக்கா பிளான் என நான் ஸ்டாப்பாக, பாய்ண்ட் டூபாய்ண்டாக பாய்ந்து கொண்டிருக்கிறார் விஜய்.இன்றைய மார்க்கெட் படி, இவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை, 4 கோடி மட்டும் தான். இப்போதையநிலவரப்படி விஜய்யின் படம் பூஜை போடப்படும் அன்றே, அவ்வளவு ஏன் அறிவிப்பு வெளியாகும் அன்றே அனைத்துஏரியாக்களும் பறந்து விடுகின்றன.இதனால் விஜய் கேட்கும் தொகையைக் கொட்டிக் கொடுத்து, அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் பொட்டியும்,கையுமாக தயாராக இருக்கின்றனர்.இப்போது இவர் ஏ.எம். ரத்தினம் தயாரிப்பில், பேரரசு இயக்கத்தில் சிவகாசி படத்தில் பரபரப்பாக இருக்கிறார். இது ஒருதீபாவளி பட்டாசாக ரிலீஸாகிறது. இதை முடித்த கையுடன் அப்பச்சன் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் புலி.இதற்குப் பிறகு அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிப்பில், ரமணா இயக்கத்தில் மாஸ் என அடுத்தடுத்து மூன்று படங்களுடன்களத்தில் விறுவிறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மாஸ் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதுகுறிப்பிட வேண்டிய அம்சம்.இப்படி பரபரப்பாக இருக்கும் விஜய்யின் மனதில் ஒரு திட்டம் உள்ளது. அது வேறு ஒன்றுமில்லை. எப்படியாவது தாஸில்முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயை நடிக்க வைத்து விட வேண்டும் என்பது தான் அந்த திட்டம்."ஐஸுக்காக விஜய் தரப்பு இப்போதே கடுமையாக வலை வீசத் தொடங்கி விட்டனர். பிரஷாந்துடன் ஜீன்ஸுக்குப் பிறகுகோலிவுட்டில் தலைவைத்துப் படுக்காமல் இருந்து வரும் "ஐஸின் பார்வை இப்போதைக்கு பாலிவுட், ஹாலிவுட் பக்கம் தான்இருக்கிறது.கோலிவுட்டைப் பற்றியெல்லாம் சிந்திக்கக் கூட நேரமில்லாமல் அவரும் ரொம்ப பிஸியாகத் தான் இருக்கிறார். ஆனாலும்எப்படியாவது ஐஸ்வர்யாராயை தாஸில் நடிக்க வைத்துத் தான் மறுவேலை என்று கூறி களத்தில் இறங்கியுள்ளது விஜய் தரப்பு."ஐஸின் கடைக்கண் பார்வை கோலிவுட் பக்கம் திரும்புமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

ஐஸ்வர்யாராய்க்கு "குறி வைக்கும் விஜய் கோலிவுட்டில் ரஜினிக்கு அடுத்த இடத்தைப் பிடித்து விட்ட மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் விஜய், முன்னாள் உலகஅழகி ஐஸ்வர்யாராய்க்கு குறி வைத்துள்ளார். தனது அடுத்த படத்தில் எப்படியாவது "ஐஸை நடிக்க வைத்து விட வேண்டும் என்ற முடிவுடன் உள்ளார் அவர்.கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு விஜய் தான் என்று சொல்லி விடலாம். இதற்குகாரணம் இல்லாமல் இல்லை. திருமலை, கில்லி, அதற்கு அடுத்து வந்த திருப்பாச்சி ஆகிய படங்களுக்குப் பிறகு இவரதுமார்க்கெட் எங்கேயோ போய்விட்டது.ஒரு படம் முடிவதற்குள் அடுத்து இரண்டு படங்களுக்கான அறிவிப்பு, பக்கா பிளான் என நான் ஸ்டாப்பாக, பாய்ண்ட் டூபாய்ண்டாக பாய்ந்து கொண்டிருக்கிறார் விஜய்.இன்றைய மார்க்கெட் படி, இவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை, 4 கோடி மட்டும் தான். இப்போதையநிலவரப்படி விஜய்யின் படம் பூஜை போடப்படும் அன்றே, அவ்வளவு ஏன் அறிவிப்பு வெளியாகும் அன்றே அனைத்துஏரியாக்களும் பறந்து விடுகின்றன.இதனால் விஜய் கேட்கும் தொகையைக் கொட்டிக் கொடுத்து, அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் பொட்டியும்,கையுமாக தயாராக இருக்கின்றனர்.இப்போது இவர் ஏ.எம். ரத்தினம் தயாரிப்பில், பேரரசு இயக்கத்தில் சிவகாசி படத்தில் பரபரப்பாக இருக்கிறார். இது ஒருதீபாவளி பட்டாசாக ரிலீஸாகிறது. இதை முடித்த கையுடன் அப்பச்சன் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் புலி.இதற்குப் பிறகு அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிப்பில், ரமணா இயக்கத்தில் மாஸ் என அடுத்தடுத்து மூன்று படங்களுடன்களத்தில் விறுவிறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மாஸ் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதுகுறிப்பிட வேண்டிய அம்சம்.இப்படி பரபரப்பாக இருக்கும் விஜய்யின் மனதில் ஒரு திட்டம் உள்ளது. அது வேறு ஒன்றுமில்லை. எப்படியாவது தாஸில்முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயை நடிக்க வைத்து விட வேண்டும் என்பது தான் அந்த திட்டம்."ஐஸுக்காக விஜய் தரப்பு இப்போதே கடுமையாக வலை வீசத் தொடங்கி விட்டனர். பிரஷாந்துடன் ஜீன்ஸுக்குப் பிறகுகோலிவுட்டில் தலைவைத்துப் படுக்காமல் இருந்து வரும் "ஐஸின் பார்வை இப்போதைக்கு பாலிவுட், ஹாலிவுட் பக்கம் தான்இருக்கிறது.கோலிவுட்டைப் பற்றியெல்லாம் சிந்திக்கக் கூட நேரமில்லாமல் அவரும் ரொம்ப பிஸியாகத் தான் இருக்கிறார். ஆனாலும்எப்படியாவது ஐஸ்வர்யாராயை தாஸில் நடிக்க வைத்துத் தான் மறுவேலை என்று கூறி களத்தில் இறங்கியுள்ளது விஜய் தரப்பு."ஐஸின் கடைக்கண் பார்வை கோலிவுட் பக்கம் திரும்புமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் ரஜினிக்கு அடுத்த இடத்தைப் பிடித்து விட்ட மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் விஜய், முன்னாள் உலகஅழகி ஐஸ்வர்யாராய்க்கு குறி வைத்துள்ளார்.

தனது அடுத்த படத்தில் எப்படியாவது "ஐஸை நடிக்க வைத்து விட வேண்டும் என்ற முடிவுடன் உள்ளார் அவர்.

கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு விஜய் தான் என்று சொல்லி விடலாம். இதற்குகாரணம் இல்லாமல் இல்லை. திருமலை, கில்லி, அதற்கு அடுத்து வந்த திருப்பாச்சி ஆகிய படங்களுக்குப் பிறகு இவரதுமார்க்கெட் எங்கேயோ போய்விட்டது.

ஒரு படம் முடிவதற்குள் அடுத்து இரண்டு படங்களுக்கான அறிவிப்பு, பக்கா பிளான் என நான் ஸ்டாப்பாக, பாய்ண்ட் டூபாய்ண்டாக பாய்ந்து கொண்டிருக்கிறார் விஜய்.

இன்றைய மார்க்கெட் படி, இவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை, 4 கோடி மட்டும் தான். இப்போதையநிலவரப்படி விஜய்யின் படம் பூஜை போடப்படும் அன்றே, அவ்வளவு ஏன் அறிவிப்பு வெளியாகும் அன்றே அனைத்துஏரியாக்களும் பறந்து விடுகின்றன.

இதனால் விஜய் கேட்கும் தொகையைக் கொட்டிக் கொடுத்து, அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் பொட்டியும்,கையுமாக தயாராக இருக்கின்றனர்.

இப்போது இவர் ஏ.எம். ரத்தினம் தயாரிப்பில், பேரரசு இயக்கத்தில் சிவகாசி படத்தில் பரபரப்பாக இருக்கிறார். இது ஒருதீபாவளி பட்டாசாக ரிலீஸாகிறது. இதை முடித்த கையுடன் அப்பச்சன் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் புலி.

இதற்குப் பிறகு அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிப்பில், ரமணா இயக்கத்தில் மாஸ் என அடுத்தடுத்து மூன்று படங்களுடன்களத்தில் விறுவிறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மாஸ் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதுகுறிப்பிட வேண்டிய அம்சம்.

இப்படி பரபரப்பாக இருக்கும் விஜய்யின் மனதில் ஒரு திட்டம் உள்ளது. அது வேறு ஒன்றுமில்லை. எப்படியாவது தாஸில்முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயை நடிக்க வைத்து விட வேண்டும் என்பது தான் அந்த திட்டம்.

"ஐஸுக்காக விஜய் தரப்பு இப்போதே கடுமையாக வலை வீசத் தொடங்கி விட்டனர். பிரஷாந்துடன் ஜீன்ஸுக்குப் பிறகுகோலிவுட்டில் தலைவைத்துப் படுக்காமல் இருந்து வரும் "ஐஸின் பார்வை இப்போதைக்கு பாலிவுட், ஹாலிவுட் பக்கம் தான்இருக்கிறது.

கோலிவுட்டைப் பற்றியெல்லாம் சிந்திக்கக் கூட நேரமில்லாமல் அவரும் ரொம்ப பிஸியாகத் தான் இருக்கிறார். ஆனாலும்எப்படியாவது ஐஸ்வர்யாராயை தாஸில் நடிக்க வைத்துத் தான் மறுவேலை என்று கூறி களத்தில் இறங்கியுள்ளது விஜய் தரப்பு.

"ஐஸின் கடைக்கண் பார்வை கோலிவுட் பக்கம் திரும்புமா? பொறுத்திருந்து பார்ப்போம்!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil