என்னது...இது நம்ம கேப்டன் விஜயகாந்த்தா...லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்
சென்னை : கேப்டன் விஜயகாந்த்தின் தற்போதைய போட்டோ ஒன்று இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள், இவர் கேப்டன் விஜயகாந்த்தா என அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.
Recommended Video
1970 களில் துவங்கி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்தார் விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிறகு திரையுலகினரும், ரசிகர்களும் இவரை பாசத்துடன் கேப்டன் என அழைத்து வருகின்றனர். 1980, 90 களில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தார் விஜயகாந்த்.

ஒரே நடிகர் விஜயகாந்த் தான்
தமிழ் சினிமாவில் 20 க்கும் அதிகமான படங்களில் போலீஸ் ஆபீசர் ரோலில் நடித்த ஹீரோ என்றால் அது விஜயகாந்த் தான். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே அரசியலிலும் ஈடுபட்டு வந்தார் விஜயகாந்த். நடிகர் சங்கத்தில் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த விஜயகாந்த், அரசியலுக்கு வந்து 2005 ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை துவக்கி தீவிர அரசியலில் இறங்கி எம்எம்ஏ, எதிர்க்கட்சி தலைவர் என படிப்படியாக உயர்ந்தார்.

ஓய்வில் இருக்கும் விஜயகாந்த்
2016 ம் ஆண்டிற்கு பிறகு உடல்நிலை காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் போனது. அதன் பிறகு தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார் விஜயகாந்த். விஜயகாந்த் கடைசியாக தனது மகன் ஷண்முகபாண்டியன் ஹீரோவாக அறிமுகமான சகாப்தம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா மறுத்திருந்தார்.

மீண்டும் சினிமாவில் நடிக்கிறாரா
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி லீட் ரோலில் நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் பவர்ஃபுல்லான கேரக்டர் ஒன்றில் நடிக்க விஜயகாந்த்திடம் பேசப்பட்டு வருவதாக விஜய் மில்டன் உறுதிபட தெரிவித்துள்ளார். எல்லாம் முடிவாகி விட்டால் அடுத்த ஷுட்டிங்கில் விஜயகாந்த் கலந்து கொள்வார் என அவர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

என்னது இது விஜயகாந்த்தா
இந்நிலையில் விஜயகாந்த்தின் தற்போதைய தோற்றம் இது தான் என குறிப்பிட்டு போட்டோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மிக வயதான தோற்றத்தில், ஆள் அடையாளமே தெரியாத நிலையில் இருக்கும் அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்னது...இது விஜயகாந்த்தா. அவரா இப்படி ஒரு தோற்றத்தில் இருக்கிறார் என பலரும் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











