»   »  “மன்னிப்பு எங்க பரம்பரைக்கே பிடிக்காத வார்த்தை”: சொல்வது சகாப்தம் சண்முக பாண்டியன்

“மன்னிப்பு எங்க பரம்பரைக்கே பிடிக்காத வார்த்தை”: சொல்வது சகாப்தம் சண்முக பாண்டியன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

"தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு" என்ற வசனத்தை ‘ரமணா' படத்தில் விஜயகாந்த் பேசியிருக்கிறார். பிரபலமான அந்த வசனத்தை கொஞ்சம் மாற்றி ‘மன்னிப்பு என் பரம்பரைக்கு பிடிக்காத வார்த்தை' என்று ‘சகாப்தம்' படத்தில் பேசியிருக்கிறார் அவரது மகன் சண்முக பாண்டியன்.

நடிகரும் தேமுதிக தலைவருமாக விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் தற்போது சகாப்தம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


பக்கம் பக்கமா வசனம் இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் பேசுவது விஜயகாந்த் ஸ்பெஷல். புள்ளிவிபரப் புலியாக அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் விசிலும் கைத்தட்டலும் பறக்கும். தன்னைப் பற்றியும் தனது நடிப்பை பற்றியும் வார இதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார் சண்முகப்பாண்டியன் படியுங்களேன்.


அப்பாவைப் போல

அப்பாவைப் போல

அப்பாவைப் போல ‘சகாப்தம்' படத்தில் இறுதிக் காட்சியில் சண்முகப்பாண்டியனும் அதுபோல் நடிக்க முயற்சி செய்திருக்கிறாராம்.


பிடித்த படங்கள்

பிடித்த படங்கள்

போலீஸ் வேடத்தில் அப்பா நடித்ததைப் பார்த்தால், போலீஸ் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றும். ‘கேப்டன் பிரபாகரன்', ‘சேதுபதி ஐபிஎஸ்', ‘சத்ரியன்', ‘மாநகர காவல்' என்று இதற்கு பல உதா ரணங்களைச் சொல்லலாம். அப்பா நடித்த படங்களில் கேப்டன் பிரபாகரன், சத்ரியன், சேதுபதி ஐபிஎஸ், ‘ரமணா' ஆகிய படங்கள் மிகவும் பிடித்த படங்களாம்.


கஷ்டமான காதல்

கஷ்டமான காதல்

சண்முகப்பாண்டியன் நடிக்க கஷ்டப்பட்டது காதல் காட்சிகள்தானாம். மற்றபடி காமெடிக் காட்சிகளில் எல்லாம் ஓரளவுக்கு இயல்பாக நடித்துவிட்டாராம்.


தனுஷ் படங்கள்

தனுஷ் படங்கள்

அப்பா விஜயகாந்தின் படங்கள் தவிர தனுஷ் படங்கள் ரொம்பப் பிடிக்குமாம். ‘பீட்சா' ‘ஜிகர்தண்டா', ‘சூதுகவ்வும்', ‘வெண்ணிலா கபடிக்குழு' போன்ற படங்களும் பிடித்த படங்கள் என்கிறார் சண்முகப்பாண்டியன்.


அப்பா போல ஜெயிப்பாரா? சண்முகப்பாண்டியன் பொறுத்திருந்து பார்க்கலாம்.English summary
Vijayakanth's son has punch dialogue his debut film. He say Mannippu Enga paramparaikke Pudikkatha Varthai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil