ரைட்டு...அவார்ட் கன்ஃபார்ம்...தெலுங்கில் விக்ரமின் மாஸ் என்ட்ரி...யாருடன், என்ன ரோல் தெரியுமா ?
சென்னை : தனுஷ், விஜய்யை தொடர்ந்து சியான் விக்ரமும் தெலுங்கிற்கு செல்ல உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதை விட விக்ரம் யாருடன் சேர்ந்து நடிக்க போகிறார், என்ன ரோலில் நடிக்க போகிறார் என்ற தகவல் தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியும், ரசிகர்களை கொண்டாடவும் வைத்துள்ளது.
சமீப காலமாக அனைத்து டாப் நடிகர்களுமே பான் இந்தியன் நடிகர்களாக வருகின்றனர். ஒரே சமயத்தில் பல மொழிகளில் பிரபலமான நடிகர்களாக மாறி வருவது அதிகரித்து வருகிறது. கோலிவுட், பாலிவுட் படங்களைத் தொடர்ந்து டோலிவுட்டிலும் தடம் பதிக்க தயாராகி வருகிறார் தனுஷ். பாலிவுட்டில் தனுஷ் நடித்த பல படங்கள் வெற்றி அடைந்ததால், தொடர்ந்து அவருக்கு இந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

தெலுங்கில் தடம் பதிக்கும் தமிழ் ஹீரோக்கள்
இந்நிலையில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் தயாராகி வருகிறது. இவரைத் தொடர்ந்து விஜய்யின் 66 படமான தளபதி 66 படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளது. சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன், அஜித் நடித்துள்ள வலிமை ஆகிய படங்களும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரிலீசாக உள்ளன.

அட விக்ரம் இந்த ரோலிலா
இவர்களை தொடர்ந்து அடுத்த டாப் ஹீரோவான சியான் விக்ரமும் தற்போது தெலுங்கிற்கு செல்ல உள்ளாராம். ஏற்கனவே மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடத்ததன் மூலம் பான் இந்தியன் நடிகராக மாறி உள்ளார் விக்ரம். இந்நிலையில் நேரடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க போகிறாராம் விக்ரம். அதுவும் தெலுங்கு சூப்பர் ஹீரோ மகேஷ்பாபுவுடன் இணைந்து நடிக்கிறாராம். அதுவும் சாதாரண ரோல் கிடையாதாம். மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம் நடிக்க போகிறாராம்.

இது புது அவதாரமா இருக்கே
விக்ரம் நடித்து சமீபத்தில் ரிலீசான மகான் படம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். கோப்ரா படத்தில் மிக அதிகமாக பல கெட்அப்களில் நடித்துள்ளார் விக்ரம். இந்நிலையில் தற்போது முதல் முறையாக வில்லன் ரோலிலும் அறிமுகமாக போகிறாராம். SSMB28 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி போகிறாராம்.

அவார்ட் கன்ஃபார்ம்
ஏற்கனவே பல தமிழில் என்ன ரோல் கொடுத்தாலும் நடித்து அசத்த கூடியவர் விக்ரம் என்ற பெயர் உள்ளது. அந்நியன் படத்தில் இவர் நடித்த அந்நியன் கேரக்டரை வேறு எவரும் சிறப்பாக பண்ண முடியாது. அதனால் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்ய போகும் அந்நியன் படத்திலும் விக்ரமையே நடிக்க வைக்க வேண்டும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஹீரோ ரோலுக்கே அப்படி என்றால், வில்லன் ரோலில் அவரின் நடிப்பை கேட்கவா வேண்டும். ஏற்கனவே இருமுகன் படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தி இருந்தார் விக்ரம். அதனால் மகேஷ் பாபுவின் 28 வது படத்திற்கு அவார்ட் கன்ஃபார்ம் என ரசிகர்கள் இப்போதே சொல்ல துவங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











