»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமலின் மருதநாயகம் வருவதற்கு முன்பு ஒரு சரித்திரப் படத்தில் நடித்து விடும் முடிவில் இருக்கிறார் விக்ரம்.

தமிழ் சினிமாவில் சிவாஜியின் சிம்மாசனம் காலியானபோது, அந்த இடத்திற்கு அடுத்து யார் வருவார் என்றுகேள்வி யார் மனதிலும் எழவில்லை. அனைவரின் சாய்ஸாக கமல் இருந்தார்.

ஆனால் கமலுக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தபோது, பல ஆண்டுகள் பதிலே கிடைக்கவில்லை. அடுத்ததலைமுறை நடிகர் என்று வந்த விஜய், அஜீத் ஆகியோர் கரம் மசாலா படங்களில் நடிப்பதிலேயே ஆர்வம்காட்டினார்கள். ஆனால் சேது படத்திற்குப் பிறகு நம்பிக்கை அளிக்கும் நடிகராக விக்ரம் பரிமளிக்கத்தொடங்கினார்.

குறிப்பாக பிதாமகன் படத்திற்குப் பிறகு, விக்ரம் தான் கமல் இடத்திற்குப் பொருத்தமானவர் என்று பலரும் கூறத்தொடங்கி விட்டார்கள்.

கமலும் அதை ஆமோதிக்கும் விதமாக ஒரு விழாவில் பேசும்போது, ஒவ்வொரு வருடமும் தேசிய விருதுஅறிவிக்கப்படும்போது என் பெயர் அதில் இருக்கிறதா என்று ஆர்வமுடன் பார்ப்பேன். பெயர் இல்லை என்றால்கொஞ்சம் ஏமாற்றமடைவேன்.

ஆனால் இந்த வருடம் சிறந்த நடிகருக்கான விருது விக்ரமுக்கு என்று அறிவிக்கப்பட்டபோது அந்த ஏமாற்றம்வரவில்லை. ஏனென்றால் தகுதியான ஒருவருக்குத்தான் அந்த விருது கிடைத்துள்ளது என்று கூறினார்.

இதைக் கேள்விப்பட்ட விக்ரம், வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார்.அதேபோல் கமலின் பாராட்டைத் தக்க வைக்கும் முயற்சியாக அடுத்த படத்தை கவனமாகத்தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்போது அதைப் பற்றித்தான் கோடம்பாக்கத்தில் பேச்சு.

மருதநாயகத்தை எடுக்காமல் சாக மாட்டேன் என்று சபதமே போட்டுள்ளார் கமல். ஆனால் கமலுக்கு முன்பாகஒரு சரித்திரப் படத்தில் நடித்து விக்ரம் முந்திக் கொண்டு விடுவார் என்கிறார்கள்.

வித்தியாசமாக நடிப்பதில் கமலைப் போலவே படுஆர்வம் கொண்ட சினிமா வெறியரான விக்ரம் தற்போது நடித்துவரும் அந்நியன் படத்திற்குப் பிறகு ஒரு சரித்திரப் பின்னணி கொண்ட படத்தில் நடிக்கவுள்ளாராம்.

கிட்டத்தட் சாமுராய் பாணி சாகஸ வீரனின் கதையாம் இது. இந்தப் படத்திற்காக இப்போதே பலவிதஆலோசனைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டாராம் விக்ரம். இந்தப் படம் தனது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைய வேண்டும் என்பதில் படு கவனம் செலுத்தி வருகிறாராம் விக்ரம்.

அந்நியனை முடித்து விட்டு இந்த சரித்திரப் படத்தில் விக்ரம் முழு மூச்சாக இறங்கப் போகிறாராம். படத்தைமிகப் பெரும் பொருட்செலவில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். படத்தைப் பற்றிய விவரங்களை மிகவும்ரகசியமாக வைத்துள்ளார்கள். படத்தின் கதையை இன்னும் கொஞ்சம் ஷார்ப் செய்து விட்டு வெளிப்படையாகஅறிவிக்கப் போகிறார்களாம்.

வெளுத்துக் கட்டுங்க விக்ரம்!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil