»   »  முதல்ல நோட்டீஸ் வரட்டும் – திமிறும் விஷால்

முதல்ல நோட்டீஸ் வரட்டும் – திமிறும் விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த நேரத்தில் விஷாலை வைத்து சண்டக்கோழி எடுத்தாரோ லிங்குசாமி நிஜத்திலும் சண்டக்கோழியாகத் தான் திரிகிறார் விஷால்.

தயாரிப்பாளர் சங்கத்தில் ஒன்றுமே நடப்பதில்லை. சும்மா பஜ்ஜி, போண்டா தின்று விட்டு பஞ்சாயத்து தான் நடக்கிறது என்று பேட்டி தட்ட சூடான தயாரிப்பாளர் சங்கம் ஒரு வாரத்திற்குள் விஷால் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தயாரிப்பாளர் சங்கம் இனி அவர் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காது என்று ஓபனாக அறிவித்துவிட்டார் தாணு.

Vishal in no mood to appologise

இதனால் விஷாலுக்கு கத்திச்சண்டைக்கு பிறகு படம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. எப்படியும் மன்னிப்பு கேட்டு முடித்துவிடுவார் என்று எதிர்பார்த்தால் மன்னிப்பு கேட்கும் எண்ணத்திலேயே இல்லையாம் விஷால்.

முதலில் அவங்க எழுத்துபூர்வமா அனுப்பட்டும். அப்புறம் அதுக்கு நான் பதில் அனுப்புறேன் என்று சொல்லிவிட்டாராம். விஷாலுக்கு நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் துணைக்கு நிற்கின்றனர்.

அந்த துணிச்சல் தான் காரணம் என்கிறார்கள்.

English summary
Vishal is reportedly not at all in a mood to say sorry to the producers council for his controversial remarks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil