விஷாலுக்கு விழும் அடி மேல் அடி.. திருமண நேரத்தில் இப்படி வரிசையா வருதே.. என்ன செய்யப்போறாரோ?
சென்னை: விஷால் கடைசியாக நடித்த மதகஜராஜா, ரத்னம், மார்க் ஆண்டனி ஆகிய மூன்று படங்களுமே அவருக்கு நல்ல ரிசல்ட்டைத்தான் கொடுத்தன. அதிலும் ரத்னம் தவிர்த்து மற்ற இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டராக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவிருந்த அவர் அதில் சிக்கல் எழுந்ததால் மகுடம் படத்தை இயக்கவிருந்தார். ஆனால் அதற்கும் சிக்கல் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்து திரை பயணத்தை ஆரம்பித்த விஷால் செல்லமே படத்தில் ஹீரோவாக நடித்தார். சண்டக்கோழி, தாமிரபரணி என வரிசையாக ஹிட் படங்களில் நடித்த அவருக்கு இடையில் சறுக்கல் ஏற்பட்டது. அவரது கவனமும் நடிகர் சங்கம் விவாகரம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், திருட்டி சிடியை ஒழிப்பது என பல பாதைகளில் சென்றது என்பது கவனிக்கத்தக்கது. இதனால் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
நீண்ட வருடங்கள் கழித்து ஹிட்: அப்படிப்பட்ட சூழலில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். மேலும் அவரது கரியரில் முதல் 100 கோடி ரூபாய் வசூலித்த படமாகவும் அமைந்தது. இதனால் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார். இதற்கிடையே சுந்தர். சி இயக்கத்தில் நடித்த மதகஜராஜாவும் கிட்டத்தட்ட 10 வருடஙக்ள் கழித்து ரிலீஸானது.

அதுவும் ஹிட்: இத்தனை வருடங்கள் கழித்து ரிலீஸாவதால் இப்போதுள்ள ஆடியன்ஸை பிடித்துவிடுமா என்ற சந்தேகம்தான் அனைவரிடமும் இருந்தது. எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இப்படமும் நூறு கோடி ரூபாய்வரை வசூலை நெருங்கியது. வரிசையாக இரண்டு படங்கள் ஹிட்டானதால் அந்த உற்சாகத்தோடு அடுத்த பட வேலைகளில் தீவிரமாக இறங்கினார் விஷால்.
துப்பறிவாளன் 2 ஸ்டாப்: அந்தவகையில் மிஷ்கினுடன் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டிருந்தார் விஷால். கதையை மிஷ்கினிடமிருந்து வாங்குவதுதான் ஏற்பாடு. மிஷ்கினோ நான்கு கோடி ரூபாயை கொடுத்தால் தடையில்லா சான்றிதழ் தருகிறேன் என சொன்னதாகவும்; அதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடியது. அந்தப் படத்துக்கு பதிலாக மகுடம் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்.
மகுடத்துக்கும் ஆப்பு: அந்தப் படத்தின் கதை இயக்குநர் ரவி அரசுனுடையது. திரைக்கதை எழுதி இயக்குவதற்கு விஷால் பிளான் செய்திருந்தார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் அந்த்ப் படத்துக்கும் சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரவி அரசிடமும் கதைக்கான தடையில்லா சான்றிதழை விஷால் பெறாததால் இயக்குநர் சங்கமும், ஃபெப்சி அமைப்பும் இப்படத்தின் ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்துமாறு கூறியிருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. திருமணம் அறிவித்த நேரத்தில் கரியரில் இப்படி அடி மேல் அடி விழுகிறதே என அவரது ரசிகர்கள் வேதனையடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











