என்னை என்ன வேணா பண்ணுங்க.. வாய் திறந்த விஜய்.. டிரெண்டாகும் #WeStandWithVIJAY ஹாஷ்டேக்!
சென்னை: கரூரில் விஜய் மக்களை சந்தித்து தவெக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
ஜன நாயகன் விஜய் ஜனங்களுக்காக நிற்காமல் விமானம் பிடித்து வீடு போய் ஒளிந்து கொண்டது ஏன் என அரசியல் கட்சிகள் முதல் நெட்டிசன்கள் வரை கேள்வி எழுப்பி வந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்கள் நிலை அறிந்து சோகத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டதாக விஜய் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தன்னை என்ன வேணா பண்ணுங்க சிஎம் சார், ஆனால், என் தொண்டர்களை எதுவும் பண்ணாதீங்க என்றும் மற்ற இடங்களை விட கரூரில் ஏன் இப்படி கோர சம்பவம் நடந்தது என விஜய் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் #WeStandWithVIJAY ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
மக்கள் பார்த்துட்டுத்தான் இருக்காங்க: விஜய் வெளியிட்ட வீடியோவில் 41 பேர் உயிரிழந்தது தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது என்றும் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். தனது கட்சி தொண்டர்களை குறிவைத்து கைது நடவடிக்கை எடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன் வைக்கும் விதமாக பேசிய விஜய் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்றும் என்னை என்ன வேணா பண்ணுங்க சிஎம் சார் என சொன்ன விஜய் எல்லாத்தையும் மக்கள் பார்த்துட்டுத்தான் இருக்காங்க என்றார்.
விஜய்க்கு ஆதரவாக: தனக்கு ஆதரவாக பேசிய கட்சி தலைவர்களுக்கும் பிரபலங்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார் விஜய். கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் இதுவரை வாய் திறக்கவே இல்லையே ஏன் என்றும் கோழையாக வீட்டுக்குள் ஒளிந்திருக்க வேண்டாம் என பல விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், விஜய் தற்போது அனைத்துக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக #WeStandWithVIJAY ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை ஒருநாள் வெல்லும்: கரூரில் நடந்த அசம்பாவிதத்துக்கு உண்மையில் யார் பொறுப்பு என்கிற உண்மை நிச்சயம் வெளியே வரும் என்றும் விஜய்க்கு ஆதரவாக நாங்க எப்போதும் கூட இருப்போம். நீ கலங்காமல் களமாடு தலைவா பார்த்துக்கலாம் என ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் தவெகவினர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











