»   »  ஏய்யா, சொன்னா செய்ய மாட்டியா?: இயக்குனரை திட்டிய பிரபாஸ்

ஏய்யா, சொன்னா செய்ய மாட்டியா?: இயக்குனரை திட்டிய பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரபாஸ் தனது புதிய படத்தின் இயக்குனர் சுஜீத்தை திட்டியது தெரிய வந்துள்ளது.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக பிரபாஸ் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ரூ. 10 கோடி சம்பளத்துடன் வந்த விளம்பர பட வாய்ப்பை கூட அவர் ஏற்கவில்லை.


பாகுபலி 2 ரிலீஸானதை அடுத்து அவர் சாஹோ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.


சுஜீத்

சுஜீத்

தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாக உள்ள சாஹோ படத்தை சுஜீத் இயக்குகிறார். படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி. இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.


பிரபாஸ்

பிரபாஸ்

ரன் ராஜா ரன் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரபாஸ் சுஜீத்திடம் தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு கூறியுள்ளார். பிரபாஸ் ஜோக்கடிக்கிறார் என்று நினைத்து சுஜீத் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


திட்டு

திட்டு

சில மாதங்கள் கழித்து பிரபாஸ் சுஜீத்தை அழைத்து கதை ரெடியா என்று கேட்க அப்பொழுது தான் அவருக்கு பிரபாஸ் சீரியஸாக பேசியது புரிய வந்தது. ஏன் கதை ரெடி பண்ணல என்று பிரபாஸ் தன்னை திட்டியதாக சுஜீத் தெரிவித்துள்ளார்.


சாஹோ

சாஹோ

பிரபாஸ் திட்டிய பிறகே நான் கதையை தயார் செய்துவிட்டு முழுநீள திரைக்கதையை அவருக்கு 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் கூறினேன். அவரும் என் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்கிறார் சுஜீத்.
English summary
Saaho moive director Sujeeth said that Prabhas scolded him after he didn't take his words seriously.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil