»   »  இத்தனை வருடங்களாக தயாரிப்பாளர் சங்கம் எங்கே போனது?..கோபம் காட்டும் உதயநிதி

இத்தனை வருடங்களாக தயாரிப்பாளர் சங்கம் எங்கே போனது?..கோபம் காட்டும் உதயநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'தெறி' பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்ற ரசிகரின் கருத்துக்கு, உதயநிதி ஸ்டாலின் கோபத்துடன் பதிலளித்திருக்கிறார்.

'தெறி' படம் செங்கல்பட்டு தியேட்டர்களில் வெளியாகாத விவகாரம் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

Where was the Producers unity for last 5 years? says Udhayanidhi Stalin

இதனால் 'தெறி' படத்திற்கு ஆதரவு கொடுத்த 11 தியேட்டர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு கொடுக்கப்படும், என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய 'மனிதன்' திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதற்கு முத்துராஜ் என்னும் ரசிகர் "சார் இந்த நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று உதயநிதியிடம் கூறினார்.

பதிலுக்கு உதயநிதி "கடந்த 5 வருடங்களாக என்னுடைய படங்களுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை. அப்போது இந்த தயாரிப்பாளர் சங்கம் எங்கே போனது? என்று கோபமாக பதிலளித்துள்ளார்.

உதயநிதியின் பதிலானது கோலிவுட்டில் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Udhayanidhi Stalin Reply his Fans Question "where was the producers unity when I was rejected entertainment tax exemption for all my films for the past 5 years?.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil