சிவகார்த்திகேயன் அளவுக்கு கூட இல்லை.. தனுஷுக்கு தமிழ்நாட்டில் குறைந்த மவுசு.. இட்லி கடை இப்படி ஆகிடுச்சே?
சென்னை: டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற ஃபீல் குட் படமே குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 90 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. பரோட்டா கடை போட்டு நித்யா மேனன் உடன் கொஞ்சுறனே கெஞ்சுறனேன்னு ஆட்டம் போட்ட விஜய் சேதுபதி 100 கோடி கல்லா கட்டி விட்டார். ஃபீல்டு அவுட் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை கம்பேக் கொடுக்க வைத்து மதராஸி படத்தின் மூலம் சிவகார்த்திகேயனும் செஞ்சுரி அடிக்க தனுஷின் படம் 50 கோடிக்கு மேல் தாண்டமாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
இன்பன் உதயநிதி ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் வழங்கிய இட்லி கடை படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இருந்தார். தனுஷ் இயக்கி நடித்த இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டவர்களே பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்த நிலையிலும் மக்கள் தனுஷ் படத்தை ஆர்வமாக பார்க்காமல் கன்னட படமான காந்தாரா சாப்டர் 1 படத்தை தமிழ்நாட்டிலும் பார்த்து வருவது தான் இட்லி கடை படத்தின் வசூல் பெரியளவில் சரிய காரணம் என்கின்றனர்.
கேஜிஎஃப்பிடம் அடிவாங்கிய பீஸ்ட்: கர்நாடகத்தில் தயாரிக்கப்பட்டு பான் இந்தியா வெற்றியை தொடர்ந்து கன்னட படங்கள் அறுவடை செய்து வருகின்றன. இந்தியாவில் இருக்கும் பெருவாரியான மக்களை டார்கெட் செய்து சரியான அளவில் சாமி கதைகளை உட்புகுத்தி படங்களை கொடுத்து வருகின்றனர். அதைவிட அவர்களுடைய மேக்கிங் தான் படங்கள் பான் இந்தியா வெற்றிக்கு காரணம் என்பது தான் குறிப்பிட வேண்டிய விஷயம். கேஜிஎஃப் 2 படத்துடன் விஜய்யின் பீஸ்ட் படமே வெளியாகி பலத்த அடியை வாங்கியது. தற்போது இட்லி கடைக்கும் அதே நிலை தான் என்கின்றனர். ஆனாலும் விஜய்யின் பீஸ்ட் படம் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டாலும் விஜய்யின் ஸ்டார்டம் காரணமாக 230 கோடி வரை வசூல் செய்தது.

தனுஷுக்கு குறையும் மவுசு: நடிகர் தனுஷ் தொடர்ந்து பல இளம் வெற்றி இயக்குநர்களுடன் படங்களை பண்ண அட்வான்ஸ் வாங்கி கமிட் செய்து வைத்துள்ளார். ஆனால், அவருடைய ஒவ்வொரு படங்களும் வெளியான பின்னர் தமிழ்நாட்டில் அவருக்கான பாக்ஸ் ஆபீஸ் மார்க்கெட் பெரிதாக இல்லை என்பது தான் கவலையளிக்கிறது. குபேரா திரைப்படம் தெலுங்கில் பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. தமிழில் வெறும் 15 கோடி தான் வசூல் செய்தது. நயன்தாரா தனுஷுக்கு எதிராக வெளிப்படையாக எழுதிய கடிதம் தான் காரணம் என நெட்டிசன்கள் அப்போதே பஞ்சாயத்து பண்ண நிலையில், தமிழ்ப்படமான இட்லி கடை படமும் தமிழ்நாட்டில் பெரிதாக பிக்கப் ஆகவில்லை. சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட்டுகள் அதிகம் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தீபாவளி ரிலீஸில் இட்லி கடை வசூலை டியூட் முறியடிக்கும் என்றூம் எதிர்பார்க்கப்படுகிறது.
போர் தொழில் இயக்குநர் படம் மாற்றுமா?: அடுத்து தனுஷ் நடித்துள்ள இந்தி படமான தேரே இஷ்க் மே படம் அடுத்த மாதம் வெளியாகிறது. ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் க்ரித்தி சனோன் நடித்துள்ள நிலையில், பாலிவுட்டில் பெரிய வெற்றியை அந்த படம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் பிப்ரவரி மாதம் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு அவருக்கு இங்கே 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படம் அமையுமா என்பதை வெயிட் பண்ணிதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











