»   »  ஜிஎஸ்டிக்கு எதிராக தல, தளபதி ஏன் வாய்ஸ் கொடுக்கவில்லை?: ஜெயம் ரவி

ஜிஎஸ்டிக்கு எதிராக தல, தளபதி ஏன் வாய்ஸ் கொடுக்கவில்லை?: ஜெயம் ரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி வரிக்கு எதிராக அஜீத் மற்றும் விஜய் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று ஜெயம் ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு ஒரே தேசம் ஒரே வரி என்று கூறி கடந்த 1ம் தேதி ஜிஎஸ்டி வரியை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.

Why do Ajith, Vijay keep mum over GST issue?: Jayam Ravi

சினிமா தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி போதாது என்று தமிழக அரசு கேளிக்கை வரி வேறு விதித்தது. இதை கண்டித்து தியேட்டர் உரிமையாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை நான்கு நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் ஜெயம் ரவி கூறியிருப்பதாவது,

ஜிஎஸ்டி வரியால் தமிழ் திரையுலகிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலேயே தியேட்டர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜிஎஸ்டிக்கு எதிராக அஜீத், விஜய் போன்ற பிரபல நடிகர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை. திரையுலகிற்கு பிரச்சனை என்று வந்தால் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஆனால் தமிழ் திரையுலகில் ஒற்றுமை இல்லை என்றார்.

English summary
Actor Jayam Ravi has asked as to why Ajith and Vijay keep mum over GST issue that affects the film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil