இன்று விக்ரம் பிறந்தநாள்...இதெல்லாம் வருமா...ஸ்பெஷல் ட்ரீட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை : நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் ட்ரீட் ஏதாவது வருமா, வர வாய்ப்புள்ளதா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டுமே கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

நடிகர் விக்ரமின் 56 வது பிறந்தநாளை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார். ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதே போல் அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் படக்குழுவினர் விக்ரமின் பிறந்தநாளை எப்படி கொண்டாட போகிறார்கள் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

2022 நடிகர் விக்ரம் ஆண்டு

2022 நடிகர் விக்ரம் ஆண்டு

விக்ரம் தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், கோப்ரா, விக்ரம் 61, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் 2022ம் ஆண்டில் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இதனால் 2022 ம் ஆண்டை ரசிகர்கள் விக்ரமின் ஆண்டு என்றே சொல்லி வருகிறார்கள். இதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் செப்டம்பர் மாத இறுதியில் ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

நேற்றே ஆரம்பிச்சுட்டாங்க

நேற்றே ஆரம்பிச்சுட்டாங்க

விக்ரம், அதிகபட்சமாக 25 கெட்அப்களில் நடித்துள்ளதாக சொல்லப்படும் கோப்ரா படம் மே 26 ம் தேதி ரிலீசாக உள்ளது. விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு கோப்ரா படக்குழுவினர் நேற்றே ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி விட்டனர். அதோடு விக்ரம் பிறந்தநாளில் கோப்ரா படத்தின் செகண்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சொல்லி உள்ளனர்.

இதெல்லாம் இன்று வருமா

இதெல்லாம் இன்று வருமா

இதனால் பிறந்தநாள் ட்ரீட்டாக விக்ரம் நடித்து வரும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரமின் போஸ்டர், விக்ரம் 61 போஸ்டர், துருவ நட்சத்திர போஸ்டர் இன்று வெளியாகுமா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இதே போல் கோப்ரா படக்குழுவினர் செகண்ட் சிங்கிள் அறிவிப்பிற்காக இன்று மற்றொரு புதிய போஸ்டரை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அட இது வேற இருக்கா

அட இது வேற இருக்கா

மற்றொரு தகவலாக ஏ.ஆர்.முருகதாஸ், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இயக்க உள்ள படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ்-விக்ரம்-சன் பிக்சர்ஸ் கூட்டணி முதல் முறையாக இணைய உள்ள இந்த புதிய படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X