»   »  என்னுடன் நடிக்க மறுத்த ஹீரோயின்களை பழிவாங்காமல் விடமாட்டேன்: பிரேம்ஜி

என்னுடன் நடிக்க மறுத்த ஹீரோயின்களை பழிவாங்காமல் விடமாட்டேன்: பிரேம்ஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாங்கா படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நடிகைகளை எதிர்காலத்தில் பழிவாங்கப் போவதாக பிரேம்ஜி அமரன் தெரிவித்துள்ளார்.

பிரேம்ஜி அமரன் சோலோ ஹீரோவாக நடித்துள்ள படம் மாங்கா. அந்த படத்தில் லீமா, அத்வைதா என இரண்டு ஹீரோயின்கள். பிரேம்ஜி இசையமைத்து நடித்துள்ள மாங்கா வரும் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது.


இந்நிலையில் இது குறித்து பிரேம்ஜி கூறுகையில்,


பந்தயம்

பந்தயம்

சென்னை 28 படத்தில் நடிக்கையில் ஜெய், வைபவ், விஜய் வசந்த், சிவா, நிதின் சத்யா மற்றும் நான் ஒரு பந்தயம் வைத்தோம். அதாவது யார் முதலில் சோலோ ஹீரோவாக ஆவது என்று. அவர்கள் எல்லாம் ஹீரோவாகிவிட்டனர். எனக்கு தான் சோலோ ஹீரோவாக 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.


வெங்கட்பிரபு

வெங்கட்பிரபு

என்னையும் மக்கள் ஹீரோவாக ஏற்றுக் கொண்டதற்கு என் அண்ணன் வெங்கட்பிரபு தான் காரணம். அவருடைய படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு சமமாக என்னை நடிக்க வைத்தார். அண்ணன் இல்லாவிட்டால் நான் வெறும் ஜீரோ.


பாகவதர்

பாகவதர்

மாங்கா படத்தில் நான் விஞ்ஞானியாகவும், பாகவதராகவும் நடித்துள்ளேன். காமெடி படமான இதற்கு நான் தான் இசையமைத்துள்ளேன்.


ஹீரோயின்

ஹீரோயின்

மாங்கா படத்தில் நடிக்க பல ஹீரோயின்கள் வந்தனர். நான் தான் ஹீரோ என்று தெரிந்ததும் அப்படியே ஓடிவிட்டார்கள். அவர்களின் பெயர்களை பட்டியலிட்டு வைத்துள்ளேன்.


பழி

பழி

எனக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஹீரோயின்களை நான் பெரிய ஹீரோவான பிறகு எனக்கு அம்மாவாக, அக்காவாக நடிக்க வைத்து பழிவாங்குவேன். என் அண்ணன் என்னை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை எடுக்க உள்ளார் என்றார் பிரேம்ஜி.


English summary
Premgi Amaren told that he will take revenge against those actresses who refused to be his heroine.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil