கோயில்களுக்கு திடீர் விசிட் அடித்த யாஷ்... என்ன காரணம் தெரியுமா ?
ஐதராபாத் : கன்னட ராக் ஸ்டார் யாஷ், திடீரென கோயில்களுக்கு விசிட் அடித்து, சாமி தரிசனம் செய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது. இவரே கோயிலுக்கு போய் தீவிர பிரார்த்தனை செய்கிறாரா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
கன்னட சினிமாவின் டாப் நடிகரான யாஷ், சினிமா, அரசியல் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறார். 2008 ல் வெளியான கேஜிஎஃப் படத்திற்கு பிறகு இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து விட்டது. தற்போது இவர் நடித்துள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 படம் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசாக உள்ளது.

அலற விடும் கேஜிஎஃப் 2
கேஜிஎஃப் 2 படத்தின் டீசர் துவங்கி, சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரைலர் வரை அனைத்து யூட்யூப்பில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. கேஜிஎஃப் 2 படத்திற்காக தனக்கான பஞ்ச் டயலாக்குகளை யாஷ் தானே எழுதி உள்ளார். அரசியல் பஞ்ச்கள் பலரும் இருப்பதால் படத்தின் டிரைலரை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

பின் வாங்கிய படங்கள்
கேஜிஎஃப் 2 படம் ரிலீசாக உள்ளதால் கன்னடம் மட்டுமின்றி இந்தியாவில் கேஜிஎஃப் 2 வெளியாகும் அனைத்து மொழிகளிலும் மற்ற நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்ய தயக்கம் காட்டப்பட்டது. பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அந்த அளவிற்கு இந்த படம் மிரட்டலாக, ரசிகர்களிடம் மிக பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாஷின் திடீர் விசிட்
யாஷ் படத்தை பார்த்து மற்றவர்கள் பயப்படும் சூழலில், தனது படம் நன்றாக ஓட வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோயில் கோயிலாக சென்று பிரார்த்தனை செய்து வருகிறார் யாஷ். குக்கி சுப்ரமணியர் கோயில், ஷேத்திர தர்மஸ்தாலா மஞ்சுநாத சாமி கோயில், சூரியனார் கோயில், ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட பல புகழ்பெற்ற கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
Recommended Video

யாஷுடன் செல்ஃபி
மிக எளிமையாக யாஷ் கோயில்களில் சாமி தரிசனம் செய்த போட்டோக்கள் வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகின்றன. யாஷை பார்த்ததும் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஏராளமான மக்கள் கூடியதால் அதிக அளவில் கூட்டம் கூடியது. கூட்டத்தை சமாளித்து, அவரை பத்திரமாக அனுப்பி வைப்பதற்குள் கோயில் நிர்வாகிகளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.


Click it and Unblock the Notifications











