»   »  'டப்' ஆகும் நயனதாரா படம்!

'டப்' ஆகும் நயனதாரா படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Nayantara

மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நயனதாரா நடித்த தஸ்கரவீரன் படம் தமிழுக்கு டப் ஆகி வருகிறது.

பிரமோத் - பப்பன் இரட்டையர் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான படம் தக்ஷ வீரன். நயனதாராதான் இதில் நாயகி. மம்முட்டி ஹீரோவாக நடித்திருந்தார். இவர்கள் தவிர செம்மீன் நாயகி ஷீலா, ராஜன் தேவ் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இப்போது இப்படத்தை தமிழுக்கு டப் செய்து கொண்டு வருகின்றனர். தமிழ் பதிப்புக்கு யுவராஜ் என்று பெயரிட்டுள்ளனர். அடுத்த மாத கடைசியில் படம் ரிலீஸாகிறதாம்.

இப்டத்தில் கொச்சு பேபி என்ற கேரக்டரில் மம்முட்டி நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த தாதா கொச்சு பேபி. தனது பாட்டியைக் கொன்ற கொலையாளியைத் தீர்த்துக் கேட்ட கேரளாவுக்கு வருகிறாராம். தாதா கதை என்றாலும் படு காமெடியான படம். இப்படம் கேரளாவில் பெரும் ஹிட் ஆன படம்.

தமிழ் பதிப்பில் மம்முட்டி கேரக்டருக்கு பில்லா என பெயரிட்டுள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil