twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நமீதாவை நெருக்கிய ரசிகர்கள்!

    By Staff
    |

    Namitha
    தனுஷ்கோடியில் நடந்த ஜகன்மோகினி படப்பிடிப்பில் நடிகை நமீதாவின் காரை ஒரு கும்பல் முற்றுகையிட்டு நெருக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயமாலினி நடித்து பல வருடங்களுக்கு முன் ரிலீசாகி வசூல் சாதனை படைத்த ஜகன்மோகினி படத்தை நமீதா வைத்து மீண்டும் எடுத்து வருகிறார்கள்.

    பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். எச்.முரளி தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் நடந்து வருகிறது. தனுஷ்கோடியில் சில காட்சிகளைப் படமாக்குவதற்காக படப்பிடிப்புக் குழுவினர் அங்கு வந்தனர். நமீதா தனிக் காரில் வந்தார். நமீதாவைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரண்டுவிட்டது.

    நமீதா படுகவர்ச்சியாக உடையணிந்து நடித்ததால், அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. ஒவ்வொரு காட்சியிலும் நடித்து முடித்ததும் நமீதா தனது காருக்குள் போய்விடுவார்.

    இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம், நமீதா புறப்படுகின்ற நேரத்தில் திடீரென்று அவரைச் சூழ்ந்துகொண்டது.

    எங்க தலைவர் நமீதாவைச் சந்தித்துப் பேச விரும்புகிறார். எனவே தனியாக சில நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் இதற்கு நமீதா உதவியாளர்கள் மறுத்துவிட்டனர். உடனே எங்கள் தலைவர் நமீதாவை பார்த்து பேசினால்தான் கார் இந்த இடத்தை விட்டு நகரமுடியும் என்று சொல்லியபடி நமீதாவின் காரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

    இதனால் கார் கதவிடுக்கில் மாட்டிக் கொண்டு நசுங்கினார் நமீதா. அங்கே பாதுகாப்புக்கு போதிய அளவு போலீசாரும் இல்லாத்தால், நமீதா பாடு படு திண்டாட்டமாகிவிட்டது.

    நமீதா சேஸிங்!

    போலீசாரால் அந்த கும்பலை விரட்டமுடியவில்லை. நமீதாவின் காரையும் நகர்த்த முடியவில்லை. நமீதா காருக்குள்ளேயே தவித்தபடி உட்கார்ந்து இருந்தார்.

    ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பின், நமீதாவின் கார் டிரைவர் சாமர்த்தியமாக காரை எடுத்து வேகமாக ஓட்டத் தொடங்க, அந்தக் கூட்டமும் விரட்ட ஆரம்பித்தது. ஆனாலும் டிரைவர் மிக புத்திசாலிதனமாக காரை அங்கிருந்து ஓட்டிச் சென்று விட்டார்.

    கடைசி வரை அந்த தலைவர் யார் என்பதை மட்டும் அந்தக் கும்பல் தெரிவிக்கவே இல்லை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X