»   »  விந்தியாவின் கற்பழிப்பு வழக்கு ரத்து

விந்தியாவின் கற்பழிப்பு வழக்கு ரத்து

Subscribe to Oneindia Tamil
Vindhya
நடிகை விந்தியா தொடர்ந்த கற்பழிப்பு முயற்சி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சங்கமம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் விந்தியா. அந்தப்படம் சிறப்பாக ஓடினாலும் விந்தியாவுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் கொசுறு வேடங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு கன்னி நிலா என்ற படத்தில் நடிப்பதற்காக ஓசூர் சென்றபோது அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார்.

அப்போது நள்ளிரவில் ஓசூரை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் கமல்ராஜ் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், அவருக்கு உடந்தையாக சம்பத்குமார் என்பவர் இருந்ததாகவும் போலீசில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து இருவர் மீதும் கற்பழிப்பு முயற்சி வழக்கைப் போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஓசூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் திடீரென்று குற்றம் சாட்டப்பட்ட இருவரும், விந்தியாவுடன் சமரசமாக செல்கிறோம், அதனால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செனனை உயர்நீதிமன்றத்தில்
மனுத்தாக்கல் செய்தனர்.

இவர்கள் தாக்கல் செய்த மனுவிற்கு ஆதரவாக நடிகை விந்தியாவும் சமரசமாக செல்வதாக பதில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவிசாரித்த நீதிபதி ஜெயபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், கற்பழிப்பு முயற்சி வழக்கை உச்சநீதிமன்றம் ரத்துசெய்ய அதிகாரமில்லை என வாதாடினார்.

விந்தியா சார்பில் ஆஜாரான வழக்கறிஞர் சுமதி வாதாடுகையில், திருமணம் நிச்சம் செய்யப்பட்டிருக்கும் நடிகை விந்தியாவிற்கு இந்த வழக்கு நிலுவையில் இருந்தால் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என வற்புறுத்தி வாதாடினார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தவறாக நடக்க முயற்சித்தனர் என்று தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என வாதாடினார்.

இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயபால், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், விந்தியா கொடுத்த புகாரை படித்து பார்த்ததில், தவறாக நடக்க முயற்சித்தனர் என்று தான் கூறப்பட்டுள்ளது. கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டனர் என்று அந்த புகாரில் இல்லை. மேலும் இருவரும் சமரசமாக செல்வதாலும், இதுபோனற வழக்கை ரத்து செய்ய சட்டத்தில் இடம் இருப்பதாலும் இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தார்.

விந்தியாவுக்கும், முன்னாள் நாயகி பானுப்ரியாவின் தம்பி கோபாலகிருஷ்ணாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil