Don't Miss!
- News
இதுதான் ரிஷி சுனக்.. விதியை மீறிய மூத்த அமைச்சர்.. ஒரே அடியாக தூக்கிய ரிஷி சுனக்! அதிரடி நடவடிக்கை
- Automobiles
இன்றைய 2023ஆம் காலக்கட்டத்தில் இந்த அம்சங்கள் இன்றி கார் வாங்குவதே வேஸ்ட்! உங்க கார்களில் என்னென்ன மிஸ் ஆகுது?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Technology
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
சதா விடும் ரீல்!

என்ன வாய்ப்பு அது...?
சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நாயகியாக நடிப்பதுதான். சிவாஜி படத்தில் ஸ்ரேயா வேடத்தில் நடிக்க முதலில் ஷங்கர் அழைத்தது சதாவைத்தானாம். அந்நியனில் நடித்ததன் மூலம் இருவருக்குமிடையே நல்ல அன்டர்ஸ்டாண்டிங் இருந்த்தால் சதாவையே சூப்பர்ஸ்டாரின் ஜோடியாக்கி விடும் திட்டத்தில் இருந்தாராம் ஷங்கர்.
படம் தொடங்குவதற்கு முன் இந்த விஷயத்தை சதாவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ இந்த விஷயத்தை ரொம்ப சாதாவாக எடுத்துக்கொண்டதோடு, அடுத்த நாளே தனக்கு இதில் ஆர்வமில்லை என்றும் கூறிவிட்டாராம். காரணம் அப்போது அவருக்கு இந்திப் படங்களில் நடிக்க அழைப்பு வந்திருந்ததாம்.
இந்தியில் நடித்தால் கோடி கோடியாகக் கொட்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஆனால் தமிழில் சுத்தமாக காணாமலே போய்விட்டார் சதா.
அவருக்கு பதில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவோ ஹாலிவுட் ரேஞ்சுக்குப் போய் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்.
அடடா... ரஜினியுடன் நடிப்பதில் இத்தனை லாபமிருக்கிறதா என லேட்டாகப் புரிந்துகொண்ட சதா, தனது ஏமாற்றத்தை மறைக்க, 'இந்திப்படத்துக்காக ரஜினி பட வாய்ப்பையே உதறியவளாக்கும் நான்' என்ற ரேஞ்சுக்கு பீலா விட்டுக் கொண்டிருக்கிறாராம்.
இப்போது ராஜா பண்டேலா இயக்கத்தில் தில் தோ தீவானா ஹய் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக சதா நடித்து வருகிறார். வரும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வருகிறதாம். படம் வெளிவந்தால், பாலிவுட்டில் நிரந்தரமாக தங்கிவிட திட்டமிட்டுள்ளார் சதா.
ஆனாலும் அவரை ஹிந்தி பத்திரிகைகள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. படத்தில் இன்னொரு இணையான ஜீனத் அமன்-ராஜ் பப்பர் குறித்தே மும்பை பத்திரிகைகள் அதிகம் எழுதுகின்றனவாம்.
தமிழில் மாதவனோடு அவர் நடித்துள்ள ஒரு படமும் வருமா வராதா என்றே தெரியவில்லை. புதுப்பட வாய்ப்புக் கேட்டாலும் யாரும் தரத் தயாராக இல்லை. விட்டால் அக்கா வேடத்துக்கு கூப்பிடுவார்கள் எனும் நிலை.
என்னதான் செய்வார் சதா... அதான் புண்பட்ட உள்ளத்தை புருடா விட்டு ஆற்றிக் கொண்டிருக்கிறார்!