»   »  யானாவின் புதிய 'அசைவு'

யானாவின் புதிய 'அசைவு'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Yana
பாலிவுட்டின் செக்ஸ் தேவதை, யானா குப்தா ஆங்கிலத்தில் புதிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி பரவி விரவிக் கிடக்கிறதாம்.

சவ்வூடு பரவல் போல, யானாவின் கவர்ச்சிப் பரவலால் பாலிவுட்டே மயங்கிக் கிடக்கிறது. ஐட்டம் கேர்ள் என முத்திரை குத்தப்பட்ட யானா குப்தா, தமிழிலும் தலை காட்டிச் சென்றவர்தான்.

அந்நியன் படத்தில் காதல் வானில் பாடலுக்கும், 'வல்லவன்' சிம்புவின் 'மன்மதன்' படத்தில் ஒரு பாடலுக்கு யானா போட்ட ஆட்டம் இளசுகளின் இதயங்களில் பிரலளயங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முதல் முறையாக ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் யானா குப்தா. ஆங்கிலத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது இந்த ஆல்பம். இதற்காக கடுமையாக உழைத்துள்ளாராம். இதுவரை இல்லாத அளவுக்கு நடன அசைவில் பெரும் புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளாராம்.

இதுகுறித்து யானா கூறுகையில், இசை ஆல்பம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பணியில் படு மும்முரமாக உள்ளேன். இந்த ஆல்பத்தில் வரும் பாடல்களை நானே எழுதி இசையமைத்துள்ளேன். நானே பாடியும் உள்ளேன்.

ஆங்கிலம் எனது தாய் மொழி இல்லை என்பதால் வார்த்தை உச்சரிப்புக்கு சற்று சிரமமாக இருந்தது. இருந்தாலும் சமாளித்து பழகிக் கொண்டு விட்டேன் என்கிறார் கவர்ச்சிப் புன்னகையுடன்.

என்னிடம் நிறையப் பேர் தனி ஆல்பம் கொண்டு வரலாமே என்று அட்வைஸ் செய்ததால்தான் ஆல்பம் உருவாக்கும் ஆசை எனக்கு வந்தது. எனது குரல் வளம் நன்றாக இருந்ததாலும், நன்றாகப் பாட வரும் என்பதாலும், எனக்கும் ஆல்பம் போடும் ஆசை வந்து விட்டது. அதனால்தான் இந்த ஆல்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

இது தரமான ஆல்பமாக இருக்கும். இளைஞர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும் என்றார் யானா.

வெறும் கவர்ச்சி ஆட்டத்திற்கு மட்டும் என்னைக் கூப்பிடாமல் நல்ல ரோல்களுடன் தயாரிப்பாளர்கள் வந்தால் சந்தோஷப்படுவேன். எனக்கு நன்றாக நடிக்கவும் தெரியும் என்பதை நிரூபிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் யானா.

யானா சொல்றது யாருக்காவது கேக்குதாண்ணா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil