»   »  காத்திருக்கும் பிரியங்கா

காத்திருக்கும் பிரியங்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priyanka
வெயில் மூலம் தமிழ் சினிமாவுக்கு விசிட் அடித்த பிரியங்கா தமிழில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் பிற தென்னிந்திய மொழிகளுக்குத் தாவி அங்கு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

மலையாள வரவுகளுக்கு தமிழ் எப்போதும் பிரமாதமான வரவேற்பு கொடுப்பது வழக்கம். ஏதாவது ஓரிருவர் இந்த வரவேற்பில் சிக்காமல், கவனிப்பாரின்றி போவதும் உண்டு. அப்படிப்பட்டவர்களில் பிரியங்காவும் ஒருவர்.

வெயில் படத்தில் பசுபதியின் காதலியாக வந்து கலக்கலான நடிப்பைக் கொடுத்தவர் பிரியங்கா. ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு சரிவர வாய்ப்பு இல்லை.

ஓவர் கிளாமர் காட்ட மாட்டேன் என்ற கொள்கையில் பிரியங்கா பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. வெயிலைத் தொடர்ந்து திருத்தம் படத்தில் மட்டுமே நடித்துள்ளார் பிரியங்கா.

இதையடுத்து மலையாளத்துக்கு திரும்பினார். அங்கு இப்போது 2 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். அப்படியே தெலுங்கிலும் தேட்டையைப் போட்டதன் பலனாக அங்கும் ஓரிரு படங்கள் கிடைத்துள்ளனவாம். கன்னடத்திலும் கூட பிரியங்காவுக்கு படங்கள் உள்ளதாம்.

தமிழ் தவிர மற்ற மூன்று திராவிட மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேனாக்கும் என்று பெருமையுன் கூறும் பிரியங்கா, அறிமுகப்படுத்திய தமிழை மறக்க மாட்டேன். எனக்கேற்றார்போன்ற கதைக்காக காத்திருக்கிறேன். ஆனால் இதுவரை வரவில்லை. வந்தால் கண்டிப்பாக தமிழுக்கும் மீண்டும் வருவேன் என்கிறார் பிரியங்கா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil