twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராக்கி சாவந்தை கைது செய்யத் தடை!

    By Chakra
    |

    Rakhi Sawant
    பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்தைக் கைது செய்ய இடைக்காரலத் தடை விதித்துள்ளது அலகாபாத் நீதிமன்றம்.

    ராக்கி சாவந்த், ஒரு தனியார் டி.வி. சானலில் 'ராக்கி கா இன்சாப்' என்ற ரியலிட்டி ஷோவை தொகுத்து அளித்து வருகிறார். இதில் வாழ்க்கையில் பிரச்சினைகளால் தவிப்போரை நேரில் வரவழைத்து பேட்டி கண்டு, தீர்வும் காணப்படுகிறது.

    இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியை சேர்ந்த வாலிபர் லட்சுமனுக்கும், அவரது மனைவி அனிதாவுக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறை தீர்த்துவைக்க ராக்கி கா இன்சாப் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர்.

    அந்த நிகழ்ச்சியின்போது, ராக்கி சாவந்த் அவரை ஆண்மையற்றவர் என்று சத்தம் போட்டு கிண்டலாகக் கூறினாராம்.

    இதனால் அவர் மனவேதனையும், அவமானமும் அடைந்து சாப்பிடுவதை விட்டு விட்டார். என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பி வந்தவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக ஜான்சியில் உள்ள பிரேம் நகர் போலீஸ் நிலையத்தில் லட்சுமனின் தாய் சாவித்திரி தேவி புகார் செய்தார். அதன்பேரில் ராக்கி சாவந்த் மற்றும் 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 504, (அமைதியை குலைக்கும் நோக்கத்தில் அவமானப்படுத்துதல்), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு தடை விதிக்கக் கோரி அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தொடுத்தார்.

    இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் இம்தியாஸ் முர்டாசா, ராம் ஆதர் சிங் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ராக்கி சாவந்தை கைது செய்வதற்கு தடை பிறப்பித்த நீதிபதிகள், அவரது வழக்கு குறித்து நான்கு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    English summary
    The Allahabad high court today stayed the arrest of actress Rakhi Sawant on the charge of abetting the suicide by a man who participated in a TV reality show "Rakhi Kha Insaaf" hosted by her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X