For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பேசாமல் பேசும் அபிநயா!

  By Sudha
  |

  நல்ல உயரம், எப்போதும் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும் குறும்புத்தனமான சிரிப்பு, யார் என்ன பேசினாலும் உடனே கிரகித்துக் கொண்டு இமிட்டேட் செய்யும் திறமை. இதுதான் அபிநயா.

  நாடோடிகள் படத்தின் மூலம் மின்னல் வேகத்தில் லைம் லைட்டுக்கு வந்தவர் அபிநயா. பேச முடியாது, கேட்க முடியாது என்ற குறைகள் இருந்தாலும், அதை அப்படியே தூரப் போட்டு விட்டு தனது திறமையாலும், அபாரமான புத்திசாலித்தனத்தாலும் அத்தனை திரை ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறார் அபிநயா.

  இயக்குநர்கள் சசிக்குமார், சமுத்திரக்கனியால் அடையாளம் காணப்பட்டு நாடோடிகள் படத்தில் நடிக்க வந்தவர் இன்று தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரபலமாகி விட்டார்.

  சிறு வயதிலிருந்தே தனக்குள் இருந்த திறமைகளை அழகுற வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார் அபிநயா. இதுகுறித்து அவரது தாயார் ஹேமலதா கூறுகையில், விளம்பரப் பட இயக்குநர் ஸ்லீபாதான் அபிநயாவின் திறமையை கண்டறிந்தவர். அவர் மூலம்தான் மாடலிங்கில் அபிநயாவை ஈடுபடுத்தினோம்.

  19 வயதாகும் அபிநயாவின் திறமையை வெளிக் கொண்டு வந்த பெருமைக்குரியவர்கள் சசிக்குமாரும், சமுத்திரக்கனியும்தான். நாடோடிகள் வந்து வெற்றி பெற்ற பின்னர் பிரபல நடிகையாகி விட்டார் அபிநயா. இதனால் அவரால் கல்லூரியில் கூட சேர முடியாமல் போய் விட்டது என்கிறார்.

  அபிநயாவின் தந்தை ஆனந்த் தெலுங்கில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர். அவர் கூறுகையில், டாக்டர் மோகன் காமேஸ்வரன் செய்த ஒரு அருமையான அறுவைச் சிகிச்சையால் இப்போது அபிநயாவால் லேசாக கேட்க முடிகிறது என்கிறார்.

  ஹேமலதா தொடருகையில், நாடோடிகள் படத்திற்குப் புதுமுகம் தேவை என்று தேடியபோதுதான் சமுத்திரக்கனி எனது மகளின் படத்தைப் பார்த்து உடனே செலக்ட் செய்தார்.

  தமிழில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்திலும் அபிநயா அதே கேரக்டரில் நடித்தார். நான் வசனங்களைப் பெற்று அதை ஆங்கிலத்தில் எழுதி அபிநயாவிடம் கொடுப்பேன். அதைப் பார்த்து அதற்கேற்ப வாயசைப்பார் அபிநயா.

  இப்போது ஈசன் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறோம். அப்படத்தில் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் பெண்ணாக நடித்திருக்கிறார் அபிநயா என்றார்.

  தமிழைப் பேசக் கூடத் தெரியாமல், குத்திக் குதறி துப்பித் தள்ளும் நடிகைகளுக்கு மத்தியில் தமிழ் உணர்வுகளை அழகாக எடுத்து வைக்கும் இந்த பேசாத அழகுப் பெண் நிச்சயம் மகத்தானவர்தான்.

  English summary
  She loves to be the centre of attraction and carries herself well. All this encouraged Abhinaya’s parents, Hemalatha and Anand, to get her to model. A character artiste in the Telugu film industry, Anand used to carry his daughter’s photos around and give it to the people he met. Now 19, Abhinaya is a well-known celebrity in the Tamil and Telugu industries. Abhinaya plays the heroine in the film Easan, who comes from a village to Chennai. She’s tall and fair, not only in physique but in acting too.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more