»   »  2015 ஹன்சிகாவின் ஆண்டு: அது எப்படி தெரியுமா?

2015 ஹன்சிகாவின் ஆண்டு: அது எப்படி தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2015ம் ஆண்டு ஹன்சிகாவின் ஆண்டு என்று கூறும் அளவுக்கு அவரது படங்கள் ரிலீஸாக உள்ளன.

2014ம் ஆண்டில் ஹன்சிகா நடிப்பில் தமிழில் மான் கராத்தே, அரண்மனை ஆகிய 2 படங்களும், தெலுங்கில் 2 படங்களும் ரிலீஸாகின. கோலிவுட் மட்டும் அல்லாமல் ஹன்சிகா டோலிவுட்டிலும் அதாவது தெலுங்கு திரையுலகிலும் மிகவும் பிசியான நடிகையாகவே உள்ளார்.

இந்நிலையில் ஆண்டு முடியும் தருவாயில் ஹன்சிகா நடித்த மற்றொரு படம் ரிலீஸாக உள்ளது.

மீகாமன்

மீகாமன்

ஹன்சிகா, ஆர்யா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள மீகாமன் படம் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.

2015

2015

2015ம் ஆண்டு ஹன்சிகாவின் ஆண்டு என்று கூறும் அளவுக்கு அவர் நடிக்கும் படங்கள் ரிலீஸாக உள்ளன.

ஆம்பள

ஆம்பள

பொங்கல் ஸ்பெஷலாக சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா, விஷால் நடித்துள்ள ஆம்பள படம் ரிலீஸாக உள்ளது.

வாலு

வாலு

நடிகை ஜெயபிரதாவின் மகனுடன் ஹன்சிகா நடித்துள்ள உயிரே உயிரே படமும், சிம்புவடன் அவர் நடித்த வாலு படமும் 2015ம் ஆண்டில் ரிலீஸாக உள்ளது.

விஜய்

விஜய்

சிம்புதேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் படத்தில் ஹன்சிகா இளவரசியாக நடிக்கிறார். இந்த படமும் 2015ல் தான் ரிலீஸாகிறது.

English summary
2015 is going to be Hansika's year as lot of her movies are getting released next year.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil