»   »  2015 ம் ஆண்டின் சிறந்த 5 இந்தி நடிகைகள் .. இவங்கதானாம்!

2015 ம் ஆண்டின் சிறந்த 5 இந்தி நடிகைகள் .. இவங்கதானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தி நடிகைகள் தங்கள் அழகால் மட்டும் லட்சக்கணக்கான இதயங்களைக் கொள்ளை கொள்ளவில்லை, தங்கள் திறமையான நடிப்பாலும் தான் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.

இந்த ஆண்டில் இதுவரை 6 மாதங்கள் கடந்து விட்டது, இதுவரை தீபிகா படுகோனும், கங்கனா ரணாவத்தும் தாங்கள் நடித்த படங்களின் மூலம் வசூலைக் குவித்து பாலிவுட்டின் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றனர்.

அடுத்து வரப் போகும் 6 மாதங்களில் இவர்கள் இருவருக்கும் கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மற்றவர்கள் பற்றி இங்கு காணலாம். இந்த 5 பேரும் இந்த வருடத்தின் சிறந்த இந்தி நடிகைகள் என்ற பட்டத்தைத் தட்டிச் செல்கிறார்கள்.

கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத்

இந்திப் படவுலகின் சிறந்த நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கிறார் கங்கனா, குயீன் படத்தில் நடித்து தேசிய விருதைப் பெற்ற இவர் தனது திறமையை மீண்டும் ஒருமுறை தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து நிரூபித்துள்ளார். அதோடு இந்தப் படத்தின் மூலம் 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்து இருக்கிறார் கங்கனா.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

பாலிவுட்டின் 100 கோடி நடிகைகளில் ஒருவரான தீபிகா பிக்கு படத்தில் நடித்து மீண்டும் ஒருமுறை தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார். மிகவும் எளிமையான வேடத்தில் அமிதாப் பச்சனின் மகளாக நடித்து கோடிக்கணக்கான இதயங்களைக் கொள்ளையடித்த தீபிகா, தற்போது பாலிவுட்டின் சிறந்த நடிகைகள் பட்டியலில் 2 ம் இடத்தில் இருக்கிறார்.

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா

சிறந்த இந்தி நடிகைகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்து இருக்கிறார் விராட் கோலியின் காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா. பீகே படத்தில் அமீர்கானின் ஜோடியாக நடித்து புகழ் பெற்ற அனுஷ்கா, NH 10 என்ற படத்தின் மூலம் மிகச் சிறந்த நடிகை என்றும் பெயர் எடுத்தவர். அதோடு இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் அனுஷ்கா சர்மா எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஷ்ரத்தா கபூர்

ஷ்ரத்தா கபூர்

பாலிவுட்டின் சிறந்த நடிகைகள் பட்டியலில் நான்காவது இடம் அம்மணிக்கு, ஆஷிகு 2 , ஏபிசிடி 2 என்று அடுத்தடுத்த 2 பெரிய ஹிட் படங்களைக் கொடுத்து இந்த லிஸ்டில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ஸ்ரத்தா கபூர். ஏபிசிடி 2 வெளியான 2 வாரங்களில் இதுவரை 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. எல்லாமே 2 என்றே வருகிறது ஸ்ரத்தாவின் அதிர்ஷ்ட நம்பர் 2 ஆக இருக்குமோ?

பூமி பெட்னேக்கர்

பூமி பெட்னேக்கர்

சிறந்த இந்தி நடிகைகளில் 5 வது இடத்தைப் பிடித்து இருக்கிறார் பூமி பெட்நேக்கர், தும் லகா கீ கைசா படத்தில் குண்டுப்பெண்ணாக நடித்து ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த பூமி இந்தப் பட்டியலில் 5 ம் இடத்தைப் பிடித்து இருக்கிறார். சிறந்த இந்தி நடிகைகள் பட்டியலில் இடம்பெற்ற மற்ற நான்கு பேருமே ஜீரோ சைஸ் ஹீரோயின்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Top Five Bollywood Actresses Of This Year , Kangana Ranaut, Deepika Padukone, Anushka Sharma, Shraddha Kapoor, Bhumi Pednekar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil