»   »  பத்மஸ்ரீ- மாதுரி சந்தோஷம்!

பத்மஸ்ரீ- மாதுரி சந்தோஷம்!

Subscribe to Oneindia Tamil
Madhuri dixit

பத்மஸ்ரீ விருது தனக்குக் கிடைத்துள்ளது பெரும் சந்தோஷத்தையும், சர்ப்ரைஸையும் அளித்துள்ளதாக நடிகை மாதுரி தீட்சித் கூறியுள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதுகளை அறிவித்தது. முன்னாள் கனவுக் கன்னியும், 2வது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளவருமான மாதுரி தீட்சித்துக்கும் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து மாதுரி சந்தோஷம் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவின் டென்வர் நகரில் வசிக்கும் மாதுரி அங்கிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விருதினால் நான் மிகவும் சந்தோஷமடைந்துள்ளேன். அதேசமயம் வியப்பாகவும் உள்ளது.

எனது வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். எனது முயற்சிகளுக்குக் கிடைத்த பலனாகவே இந்த விருதைக் கருதுகிறேன்.

உயரிய இந்த விருதுக்கு என்னை தேர்வு செய்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருது பெற எனக்கு வாய்ப்பளித்த எனது தாய் மண்ணுக்கும் இந்த நேரத்தில் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் மாதுரி.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil