»   »  என்னை இழுத்த பாவனா: காவ்யா

என்னை இழுத்த பாவனா: காவ்யா

Subscribe to Oneindia Tamil
Kavya Madhavan

தமிழ் சினிமாவில் நடிக்க நான் ரொம்ப தயங்கியபோது, பாவனாதான் எனக்கு தைரியம் கொடுத்து நடிக்க கூறினார் என்று கூறியுள்ளார் காவ்யா மாதவன்.

மலையாள திரையுலகின் தனிக்காட்டு ராணி காவ்யா மாதவன். அங்கிருந்து சகட்டுமேனிக்கு ஹீரோயின்கள் தமிழுக்கு படையெடுத்த வந்தபோதெல்லாம் சற்றும் சளைக்காமல் மலையாளத்திலேயே தொடர்ந்து நடித்து வந்தார்.

இப்போதும் கூட தமிழை விட மலையாளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் காவ்யா. என்ன காரணம் என்று காவ்யாவிடம் கேட்டால், நான் சிறு வயது முதலே மலையாளத்தில் நடித்து வருகிறேன். எனவே அது பிறந்த வீடு மாதிரி. எப்படி வேண்டுமானாலும் ஜாலியாக இருக்க முடியும்.

மலையாளத் திரையுலகினருக்கும் நான் செல்லக் குழந்தை. எனவே எந்தவித தயக்கமோ, பயமோ இல்லாமல் அங்கு நான் இருக்க முடியும். ஆனால் மற்ற திரையுலகில் அப்படி இருக்க முடியுமோ. அதனால்தான் தமிழில் நடிக்கத் தயங்கினேன்.

ஆனால் தமிழ் திரையுலகம் அப்படி இல்லை. நமது செளகரியம் எந்த வகையிலும் கெடாது என்று எனக்கு எடுத்துரைத்து தமிழில் நடிக்குமாறு தைரியமூட்டியவர் எனது தோழி பாவனாதான். அதனால்தான் இப்போது தமிழிலும் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன் என்கிறார் காவ்யா.

காவ்யா தமிழில் என் மன வானிலே, காசி என இரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இப்போது பிரசன்னாவுடன் சாது மிரண்டால் என்ற படத்தில் நடித்துள்ளார். முதல் இரு படங்களும் மலையாள இயக்குநர்களின் கைவண்ணத்தில் உருவானது. இப்போது நடித்துள்ள சாது மிரண்டால் படமும் மலையாள இயக்குநர் சித்திக்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான்.

தான் நடிக்க மறுத்த பல படங்களில் நயனதாரா, கோபிகா, நவ்யா நாயர், மீரா ஜாஸ்மின் என முன்னணி ஹீரோயின்கள் நடித்துப் பெயரைத் தட்டிப் போயுள்ளார்களாம். காவ்யா இதை சிரித்துக் கொண்டே சொல்கிறார். அதனால் அவருக்கு ஒரு வருத்தமும் இல்லையாம்.

இனிமேல் தமிழிலும் நிறைய நடிக்கப் போகிறாராம். தமிழ் ரசிகர்களை ஒரு வழி செய்து விட்டுத்தான் திரும்பப் போகிறேன் என்கிறார் காவ்யா.

மிரட்ட வருகிறார் காவ்யா, மிரண்டுக்க ரெடியாகிக்குங்க!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil