அந்த நாட்களில்.. காதலியை எப்படி சமாளிப்பது.. ரசிகர் கேட்ட கேள்வி.. இப்படியொரு பதிலளித்த இலியானா!
சென்னை: மாதவிடாய் காலத்தில் தவிக்கும் காதலியை எப்படி சமாளிப்பது என்ற ரசிகரின் கேள்விக்கு ரொம்ப சூப்பரான பதிலை நடிகை இலியானா கூறியுள்ளார்.
Recommended Video
கேடி, நண்பன் என இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை இலியானா, தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கலக்கி வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இலியானா இந்த லாக் டவுன் நேரத்தில் தொடர்ந்து ரசிகர்களிடம் கலந்துரையாடி வருகிறார்.

அந்த நாட்களில்
இந்நிலையில், ரசிகர் ஒருவர், தான் கட்டிக்கப் போகும் பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சமயத்தில் அவரை எப்படி பார்த்துக் கொள்வது, அதற்கு டிப்ஸ் ஏதும் இருந்தால் சொல்லுங்க இலியானா என திடீரென ஒரு கேள்வியை எழுப்பினார். அதனை அவாய்டு பண்ணாமல் நடிகை இலியானா கொடுத்திருக்கும் ஆலோசனைகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

ரொம்ப கவனமாக
இது போன்ற நேரத்தில் பெண்களை ரொம்ப கவனமாக கையாள வேண்டும், எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் மன நிலையில் அவர்கள் இருப்பார்கள். அதனை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும் அடிக்கடி மன நிலையில் மாற்றம் ஏற்படும் என்பதால் ரொம்ப உஷாராக அவர்களை அணுக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சாக்லேட்டை வீசுங்க
மேலும், நீங்கள் அணுகும் முறையில் ஏதேனும் தவறு ஏற்பட்டு விட்டால், அதனால் அவர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்று கொந்தளிக்க நேர்ந்தால், உடனடியாக அவர்கள் மீது சாக்லேட்டை வீசிவிட்டு அந்த இடத்தில் இருந்து ஓடிவிடுங்க என இலியானா கூறியிருப்பது அவரது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது.

அடுத்ததாக
சமீபத்தில் இலியானா வெளியிட்ட த்ரோபேக் பிகினி புகைப்படத்தை பார்த்து ரசிகர்களும் சில பிரபல நடிகைகளும் லைக் செய்திருந்தனர். சினிமாவில் அடுத்ததாக அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகி வரும் ‘தி பிக் புல்' படத்திலும், அஜய் தேவ்கனின் 'புஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா' படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











