அண்ணிதான் கத்துக்கொடுத்தாங்க.. ஜோதிகா மீது சூர்யா தங்கைக்கு இவ்வளவு பாசமா?.. வேற லெவல்

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணமாகி இத்தனை வருடங்களில் அவர்களுக்குள் எந்தவிதமான சண்டை, சச்சரவுகள் வந்ததில்லை. அதேசமயம் கடந்த சில காலமாகவே அவர்கள் வீட்டில் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் சூர்யாவின் தங்கை கொடுத்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.

சூர்யா கடைசியாக நடித்த ரெட்ரோ, கங்குவா ஆகிய இரண்டு திரைப்படங்களுமே சரியாக போகவில்லை. ரெட்ரோவாவது ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. ஆனால் கங்குவா நிலைமையோ படு மோசம். கடுமையான ட்ரோல்களை சந்தித்த அந்தப் படம் சூர்யாவின் கரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துவிட்டது. கடைசியாக அவர் ஹிட் கொடுத்தது ஜெய் பீம், சூரரைப் போற்று படங்களில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருப்பு சூர்யா: அவர் இப்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் அவர் நடிப்பதாக இருந்தார். ஒட்டுமொத்த திரையுலகமும் அந்தப் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்தது. ஆனால் படம் ட்ராப்பாகிவிட்டது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள்.

A video of Suriya s sister talking about Jyothika has become trending
Photo Credit:

தொடர்ந்து வதந்தி: சூழல் இப்படி இருக்க ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக் நிம்மதியாக வாழ்ந்துவருகிறார் சூர்யா. ஆனால் ஜோதிகாவால் சூர்யா வீட்டுக்கள் பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக கடந்த சில காலமாகவே தொடர்ந்து பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமின்றி சூர்யா மும்பைக்கு சென்று செட்டில் ஆகவே ஜோதிகாதான் காரணம் என்றும்; சென்னை வந்தால்கூட சிவகுமாரை ஜோதிகா சந்திப்பதில்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்று ஜோதிகா கொடுத்த ஒரு பேட்டியில் தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் செட்டில்: அதேசமயம் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் சென்று செட்டில் ஆனார்கள். அதற்கும் ஜோதிகாதான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதுவெல்லாம் காரணமில்லை; இத்தனை வருடங்கள் ஜோதிகா சென்னையில் இருந்தார்; அவருக்காக மும்பையில் இருந்தால் என்னவென்று தோன்றியதால் மும்பைக்கு சென்றோம் என்று சூர்யா டீசன்ட்டாக விளக்கமளித்தார்.

தங்கை பேட்டி: இந்நிலையில் சூர்யாவின் தங்கையான பிருந்தா தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "எனது அண்ணியான ஜோதிகாவுக்கு வளைகாப்பு நடந்த அடுத்த மாதத்திலேயே நான் கர்ப்பமாகிவிட்டேன். நான் எங்கள் வீட்டில் இருந்தபோது தியாவை அண்ணி எப்படி வளர்த்தார் என எல்லாத்தையும் பார்த்து கற்றுக்கொண்டேன். இப்போதும் தியாவுக்கு ஏதாவது வாங்கினால் எனது மகளுக்கும் சேர்த்து வாங்குவார். எனது மகளும் ஜோ அண்ணி மீது அதீத பாசம் வைத்திருக்கிறார். சில சமயங்களில் நான் உன்கூட வரவில்லை அத்தையுடனே இருந்துகொள்கிறேன் எனவும் மகள் சொல்லியிருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X