»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

நடிகை அபிராமி கேரளாவிலிருந்து சென்னைக்கு ஒட்டுமொத்தாக ஜாகை மாறி விட்டார்.

சண்டியர் படத்தைத் தொடர்ந்து அவரைத் தேடிமேலும் சில பட வாய்ப்புகள் வந்துள்ளன. இதனால் தான் இந்த ஜாகை மாற்றம்.

இதுநாள் வரை கேரளாவில் இருந்துபடியே தமிழில் வாய்ப்புகள் தேடிக் காண்டிருந்தார் அபிராமி.

சூட்டிங் இருந்தால் திருவனந்தபுரத்தில்இருந்து விமானத்தில் வந்து ஹோட்டலில் தங்கி (தயாரிப்பாளர் காசில் தான்) நடித்துவிட்டு திரும்பிச் சென்றுவிடுவதை வழக்கமாகவைத்திருந்தார்.

கொஞ்ச காலமாக தமிழில் புதிய வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். அடுத்தபடியாக டி.வி.சீரியலுக்குப் போக இருந்தார்.

இந் நிலையில் தான் கமலிடம் இருந்து அழைப்பு வந்தது. சண்டியர் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தந்தார்.

இதைத் தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் அபிராமியைச் சந்தித்து அட்வான்ஸை திணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது அம்மாவுடன் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார் அபிராமி.

கொசுறு: திருவனந்தபுரத்தில் பிறந்தாலும் சுத்தமான தமிழப் பெண் அபிராமி. தமிழ் நன்றாகப் பேசத் தெரியும். ஆனால், சண்டியர் படத்தில்இவருக்கு தெலுங்குப் பேசும் கேரக்டராம். இதனால் ஆள் வைத்து தெலுங்கு கற்று வருகிறார் அபிராமி.

Please Wait while comments are loading...