கல்யாணத்துக்கு ரெடியாகும் த்ரிஷா... ஆனால்… ஒரே ஒரு கண்டிஷன் !

சென்னை : நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பரபரப்பான தகவல் இணையத்தில் பரவி உள்ளது.

த்ரிஷா சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

20 ஆண்டுகளாக

20 ஆண்டுகளாக

கதாநாயகர்களை போல கதாநாயகிகளால் சினிமாத்துறையில் நீடிக்க முடியுமா என்ற விவாதம் வரும்போதெல்லாம் நடிகை த்ரிஷாவை கண் முன்னே நிறுத்திப் பார்க்கலாம். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் கோலிவுட் குயின் த்ரிஷா.

ஜோடி படத்தில்

ஜோடி படத்தில்

சிம்ரன் பிரஷாந்த் நடித்த ஜோடி திரைப்படத்தி சிம்ரனின் தோழிஎன்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்தார் த்ரிஷா. இன்று, அஜித், விஜய்,சூர்யா, தனுஷ்,விக்ரம், கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

மௌனம் பேசியதே

மௌனம் பேசியதே

லேசா லேசா திரைப்படத்தில் ஒப்பந்தமானார் த்ரிஷா. ஆனால் அதற்கு முன்னதாகவே மெளனம் பேசியதே வெளியானது. அப்படத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத நகரங்களில் இருக்கும் ஒரு சாதாரண பெண்ணின் சாயலை அப்படியே கொண்டு வந்தார் த்ரிஷா.

திருப்புமனை கில்லி

திருப்புமனை கில்லி

த்ரிஷாவை தமிழ் சினிமாவும், தமிழ் ரசிகர்களும் அதிகம் கவனிக்க வைத்த திரைப்படம் 'சாமி. காமெடி, ரொமான்ஸ் என அனைத்து தரப்பு நடிப்பையும் புவனாவாக அள்ளி வீசியிருப்பார் த்ரிஷா. அதற்கு பின் அலை, எனக்கு 20 உனக்கு 18, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் தொடர்ந்தவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் கால் பதித்தார். த்ரிஷா சினிமா வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கில்லி. கிட்டத்தட்ட 20 வருடங்களான த்ரிஷா திரையில் ஜொலித்து வருகிறார்.

த்ரிஷா விரைவில் திருமணம்

த்ரிஷா விரைவில் திருமணம்

இந்நிலையில், தற்போதும் த்ரிஷா திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. த்ரிஷா தற்போது, சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும், மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மலையாளத்தில் ஒரு படத்திலும் கன்னடத்தில் ஒரு படத்திலும் த்ரிஷா எந்த ஒப்பந்தமாகி உள்ளார். அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் புது படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

த்ரிஷாவின் தோழி

த்ரிஷாவின் தோழி

த்ரிஷாவின் பிறந்த நாள் மே மாதம் கொண்டாடப்பட்டது. அப்போதே, த்ரிஷாவின் நெருங்கிய தோழி சார்மி, த்ரிஷா பேச்சிலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இது என குறிப்பிட்டிருந்தார். இந்த வருடத்தில் த்ரிஷாவுக்கு திருமணமாகிவிடும் என்பதையே அவர் அவ்வாறு கூறினார் என்றுஅப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் திரிஷாவோ, நான் திருமணம் செய்தால் காதல் திருமணம்தான் செய்வேன் என்று அடம் பிடித்து வருகிறாராம். இந்த வயதில் காதல் திருமணமா என குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகும் பிஸி

திருமணத்திற்கு பிறகும் பிஸி

முன்பு திருமணமானால், அத்தோடு நடிகைகளின் திரைவாழ்க்கைக்கு என்ட் கார்ட் விழும். ஆனால், இப்போது அப்படியில்லை. திருமணமான நாற்பது பிளஸ்ஸில் இருக்கும் வித்யா பாலன், ராணி முகர்ஜி, மஞ்சு வாரியர் போன்ற நடிகைகள் தொடர்ந்து நாயகியாக நடிக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகும் பிஸியாக நடிக்கும் சமந்தா, தீபிகா படுகோன் போன்று ஒரு டஜன் பேரை சொல்ல முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X