நடிகை ஆத்மிகாவுக்கு எப்போதும் ஃபேவரிட் உடை இதுதானாம்.. அவரே பதிவிட்ட க்யூட் புகைப்படம்!

சென்னை : ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா

சமீபத்தில் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருப்பார்

அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் ஆத்மிகா வுக்கு மிகவும் பிடித்த உடை இதுதானாம்.

இருவருக்கும் அறிமுகப் படமாக

இருவருக்கும் அறிமுகப் படமாக

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் இசையை அனைவரும் விரும்பும் வகையில் கொடுத்துக்கொண்டு வருபவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் கேட்டவுடனேயே அனைவருக்கும் பிடிக்கும் வகையில் பல நல்ல இசையை கொடுத்து வந்தார். இப்பொழுது ஹீரோவாக மாறி பல படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் ஹீரோவாக அறிமுகமான மீசைய முறுக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா . ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஆத்மிகா என இருவருக்கும் இந்த படம் அறிமுகப் படமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது

ரிலீசாகாமல் உள்ளது

ரிலீசாகாமல் உள்ளது

மீசைய முறுக்கு வெற்றி பெற்ற நிலையில் ஆத்மிகாவுக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் என்ற படத்தில் நடித்து வந்தார் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்தும் சில பிரச்சனைகள் காரணமாக இன்று வரை ரிலீசாகாமல் உள்ளது.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக

ஒவ்வொரு படங்களிலும் அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜய் ஆண்டனி இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த திரைப்படம் கோடியில் ஒருவன். மிகவும் வித்தியாசமான ஆக்ஷன் கதைகளில் வெளியான இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து கலக்கி இருப்பார் ஆத்மிகா. கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனி ஆத்மிகா வின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்க மிக விரைவிலேயே இருவரும் மற்றுமொரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

Recommended Video

அப்பாவ ரொம்ப MISS பண்றேன் | ACTRESS AATHMIKA CHAT | FILMIBEAT TAMIL
சேலைதான் எப்போதும் ஃபேவரைட்..

சேலைதான் எப்போதும் ஃபேவரைட்..

க்யூட்டான நடிகை என ரசிகர்கள் மத்தியில் வலம்வரும் ஆத்மிகா இப்பொழுது கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த கொண்டுள்ளார். அந்த வகையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சி ததும்ப ததும்ப ஆத்மிகா வெளியிடும் புகைப்படங்கள் இணையதளத்தை கொதிக்க விடுகிறது . சேலை மாடர்ன் டிரஸ் என எந்த உடை அணிந்தாலும் மிகக் கச்சிதமாக இருக்கும் ஆத்மிகா வுக்கு மிகவும் பிடித்த உடை சேலை தானாம். எனவே பச்சை நிற சேலையை அணிந்து கொண்டு செம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனக்கு மிகவும் பிடித்த உடை சேலை தான் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X