Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கடல் கன்னி உடையில் ஜொலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
சென்னை: மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது தமிழிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார்
Recommended Video
விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஐஸ்வர்யா லட்சுமி அறிமுகம் செய்யப்பட்டார்
மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி கடல் உடையில் ஜொலிக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
விஜய் சேதுபதி செய்த காரியத்தால் திக்குமுக்காடி போன ரசிகர்கள்...அப்படி என்ன செய்தார் ?

இரண்டு கதாநாயகிகள்
தமிழ் சினிமாவில் புது வரவாக கலக்கி கொண்டுள்ளவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த இவர் இப்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து கலக்கிக் கொண்டு உள்ளார் அந்த வகையில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் முழுக்க முழுக்க ஆக்ஷன் நாயகனாக நடித்த இந்த திரைப்படம் முழுவதும் ஆக்ஷன் கதை களத்தில் படமாக்கப்பட்டது இந்த படத்தில் தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

இலங்கை தமிழ் பெண்ணாக
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ஆக்சன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை இருப்பினும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு இந்த படம் மிகப்பெரிய அறிமுகப் படமாக அமைந்தது இந்த நிலையில் அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் என்ற படத்திலும் நடித்தார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மிகவும் வித்தியாசமான ஹாலிவுட் பட ஸ்டைலில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடித்து இருந்தார் மேலும் இலங்கை தமிழில் கொஞ்சி பேசி அட்டகாச படுத்தி இருந்தார்

பொன்னியின் செல்வன்
இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது படப்பிடிப்பு முடிந்து இப்பொழுது பாடல்கள் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் இதை தொடர்ந்து கேப்டன் என்ற படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

கடல்கன்னி உடையில் ஜொலிக்கும்
இவ்வாறு மலையாளம் மற்றும் தமிழில் இதுவரை அதிரடி காட்டிக்கொண்டிருந்த ஐஸ்வர்யா லட்சுமி தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்கிறார். கோட்சே திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகத்தை கொடுக்க உள்ளார். இவ்வாறு தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான நடிகையாக குறுகிய காலத்திலேயே பெயரை எடுத்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது கடல்கன்னி உடையில் ஜொலிக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.