ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி இணையதளம்.. தனது படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது.. நீதிமன்றத்தில் வழக்கு!

டெல்லி: நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பல போலி இணையதளங்களில் தனது பெயர், படம் மற்றும் குரல் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்குமாறு அவர் இந்த மனுவில் கோரியுள்ளார். இது ஆன்லைன் தளங்களில் பெருகி வரும் மோசடிகளுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராய்: மோசடி செய்பவர்கள் ஐஸ்வர்யா ராயின் பெயரையும் படங்களையும் பயன்படுத்தி ஆன்லைன் லாட்டரி, பணப் பரிமாற்றம் செய்து பொதுமக்களை ஏமாற்றுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுபோன்ற ஒரு மோசடியில் பாதிக்கப்பட்ட ஒருவர், ஐஸ்வர்யா ராயின் குடும்பத்திற்கு இந்த மோசடியில் டர்பு இருப்பதாகக் கூறி ரூ.3 லட்சம் இழப்பீடு கேட்டு புகார் அளித்து இருப்பதாகவும், இது போன்று நடக்கும் மோசடிகள் நடிகையின் பெயருக்கு பெரும் களங்கத்தையும், நிதி இழப்பை ஏற்படுத்துவதாகவும் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aishwarya Rai Delhi high court
Photo Credit:

நீதிமன்றம் உத்தரவு: இந்த வழக்கு குறித்து நீதிபதி சஞ்சீவ் நருலா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, சமூக ஊடக நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் சில போலி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிறுவனங்கள் ஐஸ்வர்யா ராயின் உரிமைகளை மீறி, அவரது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், இந்த மோசடி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் , போலி இணையதள முகவரியை உடனயடிகாக நீக்க வேண்டும், அப்படி நீக்காவிட்டால் கூகுள் நிறுவனத்தை பிரதிவாதியாக சேர்க்க நேரிடும் என டெல்லி நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X