Amala paul: கையை மேல தூக்கி.. அட்டகாசமாக போஸ் கொடுத்த அமலா பால்!

சென்னை: பிரபல இயக்குனர் விஜய் உடனான திருமண முறிவுக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அமலாபால். முன்பை விட தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது இணையத்தில் அவர் பதிவிட்டுள்ள போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

நடிகை அமலா பால், அறிமுகமான புதிதிலேயே பரபரப்பாக பேசப்பட்டவர் இருந்தார். அதற்கு காரணம், வேலு பிரபாகரனின் சிந்து சமவெளி படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் தான். அதாவது, மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டு,மாமனாருடன் முறையற்ற உறவில் இருக்கும் மருமகளை பற்றிய கதை. இந்த கதையில் சலனமே இல்லாமல் நடித்தார். இதனால், பலரும் அவரை கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அமலா பால், அடுத்த படத்தில் கவனம் செலுத்தினார்.

நடிகை அமலா பால்: இதையடுத்து, பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. கவர்ச்சி நடிகை என்ற பெயர் மாறி, திறமையான நடிகை என்ற பெயரை பெற்று தந்தது. அதற்குப் பிறகு, விஜய், ஆர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்த தலைவா நடித்த போது, படத்தின் இயக்குனரான ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில், இயக்குநரின் பெற்றோர் அமலா பாலை ஏற்றுக்கொள்ளவில்லை, இதனால், குடும்பத்தில் பிரச்சனை வந்துள்ளது. அதற்குப் பிறகு சமாளித்து அமலா பாலை திருமணம் செய்து கொண்டார் ஏஎல் விஜய்.

amala paul photo
Photo Credit:

அட்டகாசமான போஸ்: திருமணத்திற்கு பிறகும் அமலா பால் சினிமாவில் நடிக்க விரும்பியதால், குடும்பத்தில் திடீரென பிரச்சனை ஏற்பட இருவரும் பிரிந்தது. இதனால் மன வேதனையில் இருந்த அமலா பால், ஆன்மீகப் பயணம் செல்வது, நண்பரகளுடன் ஆட்டம் போடுவது, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவது என ஏடாகூடமாக பல விஷயத்தை செய்து வைத்தார். இதையடுத்து, திடீரென, அமலா பால், நண்பர் ஜகத் தேசாய் என்பவரை தான் காதலிப்பதாகவும் அவருடன் உறவில் இருப்பதாகவும் அறிவித்தார். தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால், அவ்வப்போது கணவன், குழந்தையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வைத்தார். குழந்தை பிறப்பிற்கு பிறகு சற்று எடை அதிகரித்து காணப்பட்ட அமலா பால் தற்போது, சற்று உடல் குறைத்து காணப்படுகிறது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X