Don't Miss!
- News
ரொம்ப அரிதான நிகழ்வு.. "இந்த" தேதியில் இங்கெல்லாம் மழை கொட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வார்னிங்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடிக்கவரும் பாவனா... ரசிகர்கள் உற்சாகம்
திருவனந்தபுரம் : நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பாவனா தற்போது மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார்.
விக்னேஷ் சிவனால் அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ரெண்டு காதல்.. பறக்கும் AK62 எதிர்பார்ப்பு மீம்கள்!

நடிகை பாவனா
நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் தொடர்ந்து பிசியான நடிகையாக இருந்து வந்தார். கடைசியாக கடந்த 2017ல் வெளியான ஆதம் ஜான் என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மலையாளத்தில் ரீ-என்ட்ரி
தனக்கு சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலை ஏற்பட்டதாகவும் ஆனால் சிலர் வாய்ப்பு வழங்க முன்வந்த நிலையில் அதை ஏற்கும் மனநிலை தனக்கு இல்லாமல் இருந்ததையும் அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது தெரிவித்திருந்தார். மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்கவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

காதல் கதையில் பாவனா
இந்நிலையில் மலையாளத்தில் புதிய படமொன்றில் இவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காதல் கதையை மையமாக கொண்ட இந்தப் படத்திற்கு என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்து என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முதல் பார்வையை நடிகர் மம்முட்டி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மம்முட்டி வெளியிட்ட போஸ்டர்
இதையடுத்து பாவனாவும் இந்தப் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மைமூனத் இயக்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் வரும் மே மாதம் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் பாவனாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஷரபுதின். ரெனிஷ் அப்துல் காதர் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.

ஐந்து வருட காத்திருப்பு
ஐந்து வருட காத்திருப்பிற்கு பின்பு இந்தப் படத்தில் பாவனா நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்டுத்தியுள்ளது. தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான பாவனா, தொடர்ந்து அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மலையாளத்திலும் இவரது நடிப்பில் சிறப்பான படங்கள் வெளியாகின.