»   »  கன்னட தயாரிப்பாளருடன் எனது திருமணம் விரைவில் நடைபெறும்- பாவனா

கன்னட தயாரிப்பாளருடன் எனது திருமணம் விரைவில் நடைபெறும்- பாவனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கன்னட தயாரிப்பாளரை காதலிப்பது உண்மைதான் என்று நடிகை பாவனா தெரிவித்து இருக்கிறார்.

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா. தொடர்ந்து தீபாவளி, கிழக்குக் கடற்கரை சாலை, அசல் போன்ற ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

தற்போது மலையாளத் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் பாவனா, தனது திருமணம் மற்றும் காதல் குறித்து முதன்முறையாக மனம் திறந்திருக்கிறார்.

பாவனா

பாவனா

இயக்குநர் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாவனா. தொடர்ந்து தீபாவளி, கிழக்குக் கடற்கரை சாலை, வெயில், கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் அசல். அதற்குப் பின் வேறு எந்தத் தமிழ் படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

மலையாளம், கன்னடம்

மலையாளம், கன்னடம்

தமிழில் நடிப்பதைத் தவிர்த்த பாவனா தொடர்ந்து தாய் மொழியான மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் பாவனா காதலிப்பதாக திரையுலகில் கிசுகிசு கிளம்பியது ஆனால் பாவனா அதனை ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது முதன்முறையாக தனது காதல் குறித்து பாவனா மனந்திறந்திருக்கிறார்.

கன்னட தயாரிப்பாளர்

கன்னட தயாரிப்பாளர்

தனது காதல் குறித்து பாவனா "நானும், கன்னட தயாரிப்பாளர் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம். கடந்த 2014-ம் ஆண்டு எங்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் எங்களது திருமணம் தள்ளிப் போய்விட்டது.

இந்த வருடமே

இந்த வருடமே

எனவே இப்போது நாங்கள் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ளோம். இந்த வருடம் கண்டிப்பாக எங்கள் திருமணம் நடைபெறும். எனது காதலன் பெயர் மற்றும் விவரங்களை இப்போது வெளியிட விரும்பவில்லை. அதற்கான காலம் வரும் போது அனைவருக்கும் அவரை பற்றிய விவரங்களை தெரிவிப்பேன்" என்று தெரிவித்து இருக்கிறார்.

English summary
Malayalam Actress Bhavana tie to knot this Year. She Says in Recent Interview "i will Marry a Kannada Filmmaker will Soon".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil