நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா!
சென்னை: சம்மக் சல்லோ, இத்தரம்மாயிலதோ, பைசா ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கேத்ரின் தெரசா.
தமிழில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் நடித்து அறிமுகமானார்
இப்பொழுதே தென்னிந்தியாவிலேயே மிகப் பிரபலமான முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள கேத்ரின் தெரசா நீச்சல் குளத்தில் பிகினி உடையில் தண்ணீர் சொட்டச் சொட்ட நின்றவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

தாமதமாக அறிமுகமாகி
தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கேத்ரின் தெரசா. தமிழுக்கு மிக தாமதமாகவே அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக சம்மக் சல்லோ, இத்தரம்மாயிலதோ, பைசா உள்ளிட்ட படங்கள் இவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுத் தந்தது

மெட்ராஸ் கதாநாயகியாக
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை கேத்ரின் தெரசா அதில் மிகச் சிறப்பாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். வட சென்னைக்கு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொடுத்த மெட்ராஸ் திரைப்படம் இன்றளவும் தமிழ் சினிமாவில் ஆகச் சிறந்த திரைப்படமாக உள்ளது

வாய்ப்புகள் அமையவில்லை
மெட்ராஸ் வெற்றியைத் தொடர்ந்து கதகளி,கணிதம், கதாநாயகன், கடம்பன்,வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா 2, அருவம் என எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் மிகப் பிரபலமாக இருந்தாலும் சமீப காலமாக இவருக்கு தமிழில் எந்த வாய்ப்புகளும் அமையவில்லை. இருப்பினும் மலையாளம்,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

நிதின் ஜோடியாக புதிய திரைப்படம்
அந்த வகையில் தெலுங்கில் நந்தமுரி கல்யாண் நடிப்பில் சரித்திர பின்னணியில் உருவாகி உள்ள பிம்பிசாரா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் கேத்ரின் தெரசா , நிதின் ஜோடியாக புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் எம் எஸ் ராஜசேகர் ரெட்டி இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் மாசார்லா நியோஜகவர்கம் என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்திருந்தது.
Recommended Video

பிகினி உடையில் சொட்டச் சொட்ட
கவர்ச்சி காட்டுவதிலும் எல்லை மீறாமல் அளவுடன் காட்டிவரும் கேத்ரின் தெரசா கடைசியாக விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு தமிழில் நடிப்பது குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை . இந்த நிலையில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி நின்றுகொண்டுள்ள ஹாட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











