இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்… மகிழ்ச்சியில் ரஜினி பட நடிகை !

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 மில்லியன் எனும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் இளம் தலைமுறையினருக்கு மிகவும் படித்த நடிகையாக இருக்கிறார்.

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், அண்ணாத்த,சாணிக்காயிதம்,சர்காரு வாரி பாட்டா போன்ற திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் அம்மா

கீர்த்தி சுரேஷ் அம்மா

80களில் தமிழ், மலையாள திரைப்படங்களில் கொடிகட்டி பறந்த நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். மேகனா நெற்றிக்கண் திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது. பல திரைப்படங்களில் நடித்த இவர் திருமணத்திற்கு பிறகு குடும்பம் குட்டி என்று செட்டிலாகி விட்டார்.

கவனிக்கப்பட்டார்

கவனிக்கப்பட்டார்

அம்மா மேகனாவின் அழகை மொத்தமும் கொட்டி செதுக்கிவைத்த சிலை போல மினுமினுத்த கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்த கீர்த்தி அழகு பதுமைப்போல தனது கேரக்டரை உணர்ந்து அழகாக நடித்திருப்பார். இப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், கீர்த்தி சுரேஷ் தமிழ் திரைத்துறையினரால் கவனிக்கப்பட்டார்.

தனுஷுக்கு ஜோடியாக

தனுஷுக்கு ஜோடியாக

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான தொடரி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இத்திரைப்படத்தில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றாலும், படம் ஒன்றும் சொல்லும்படியாக இல்லை. ஒரு பக்கம் ரயில்வேகமாக ஓட, மறுபக்கம் தனுஷும் கீர்த்தி சுரேஷும் லவ் பண்ண, இது எல்லாம் போதாது என்று ரயில்வே அதிகாரிகளின் அலப்பறைகள் ஒரு பக்கம் என்று படம் மொக்கையாக இருந்தது. இருப்பினும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பாராட்டும் படி இருந்தது.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம், கீர்த்தி சுரேஷுக்கு ஒரு நல்லத் திரைப்படமாக அமைந்து. அனைவரும் இவர் மீது கண் வைத்தனர். இதையடுத்து, ரெமோ, தளபதி விஜய்யுடன் பைரவா, விஷாலுடன் சண்டைக்கோழி 2 திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தார்.

தேசிய விருது

தேசிய விருது

தென்னிந்திய சினிமா வரலாற்றில் தலை சிறந்த நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப்படமான மகாநடி திரைப்படத்தில், நடிப்பின் சிகரம் சாவித்ரியின் கேரக்டரில் நடித்தார். இதற்கு, பல எதிர்ப்புகள் கிளம்பின. நடிகையர் திலகம் சாவித்ரி எங்கே கீர்த்தி சுரேஷ் எங்கே? யார் யார எந்த கேரக்டரில் நடிக்க வைப்பது என்று ஒரு வரைமுறை இல்லையா என பல விமர்சனங்கள் கீர்த்தி சுரேஷ் மீது வைக்கப்பட்டன. ஆனால், அனைத்துக்கும் அமைதியாக இருந்த கீர்த்தி, அப்படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் வாய்களையும் அடைத்தார்.இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

Recommended Video

தடுப்பூசி கண்டிப்பா போடுங்க | Actress Keerthy Suresh Awareness Video | Vaccine
இறுதிகட்ட படப்பிடிப்பு

இறுதிகட்ட படப்பிடிப்பு

தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ். ரஜினிகாந்த்தின் 169வது திரைப்படமான அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு லக்னோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதன்முறையாக ஹீரோவாக

முதன்முறையாக ஹீரோவாக

இயக்குநர் செல்வராகவன் அருண் மாதேஸ்வரனின் சாணிக்காயிதம் படத்தில் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

கீர்த்தி சுரேஷ், மகேஷ் பாபுவுடன் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் இவர் தெலுங்கில் ரீமேக்காக உள்ள வேதாளம் திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாகவும், அஜித்தின் தங்கையாக நடித்த லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

10 மில்லியன் பாலேவர்ஸ்

10 மில்லியன் பாலேவர்ஸ்

பேக்ஸ் புக், ட்விட்டர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 மில்லியன் எனும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தென்னிந்தியாவின் சிறந்த நடிகையாகவும் அதிக ரசிகர்களின் மனங்களை வென்ற கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலையும் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X