ரெட் ஹாட் உடையில் நடிகை கீர்த்தி ஷெட்டி.. இவருக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கு!
சென்னை: தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகையான கீர்த்தி ஷெட்டி, தனது அழகிய நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். தற்போது ஒரு ஸ்டைலான உடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் வெளியான 'உப்பெனா' படத்தின் மூலம் ஹீரோயினான அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இந்த படத்தை தொடர்ந்து, 'ஷ்யாம் சிங்கா ராய்', 'வாரியர்' படங்களில் நடித்தார். அதன் பின், வெங்கட் பிரபு இயக்கத்தி தமிழ் தெலுங்கில் வெளியான 'கஸ்டடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நிவின் பாலி நடிப்பில் வெளியான 'ஏஆர்எம்' படம் மூலம் மலையாளத்துக்கு சென்றார்.

நடிகை கீர்த்தி ஷெட்டி: தற்போதுரு கீர்த்தி ஷெட்டி, நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தில் நடித்து வருகிறார். அப்படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் 'லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்' படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாக உள்ளது.
பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு: குறுகிய காலத்திலேயே பெரும் புகழ்பெற்ற நடிகையாக மாறிய கீர்த்தி ஷெட்டிக்கு, பாலிவுட்டில் கோவிந்தாவின் மகன் யஷ்வர்தன் அஹுஜாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இந்தி திரையுலகில் தனது பிரம்மாண்டமான அறிமுகமாக அமையவிருந்த இந்தத் திரைப்படத்தில் இருந்து நடிகை விலகியது ஏன் என்று தெரியவில்லை. கீர்த்தி விலகியதை அடுத்து, மற்றொரு புதுமுக நடிகை யஷ்வர்தன் அஹுஜாவுடன் ஜோடியாக நடிக்க உள்ளார்.
'
கவர்ச்சியான போட்டோஸ்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராமில், ஸ்லீவ்லேஸ் உடையில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த ஆடையில் அவர் மிகவும் கவர்ச்சியாகவும், அதே சமயம் வசதியாகவும் காணப்படுகிறார். இந்த உடை, கோடை கால நிகழ்வுகளுக்கும், இரவு நேர விருந்துகளுக்கும் ஏற்ற ஒரு ஸ்டைலான உடையாக உள்ளது. இந்த ஸ்டைலான உடைக்கு கீர்த்தி ஷெட்டி எந்த ஆபரணங்களும் அணியாமல் மிகவும் சிம்பிளாக இருக்கிறார். மேக்கப்பைப் பொறுத்தவரை, கீர்த்தி ஷெட்டி இயற்கையான தோற்றத்தையே தேர்ந்தெடுத்துள்ளார். மினிமல் மேக்கப், நியூட் லிப்ஸ்டிக் மற்றும் லேசான புருவ அலங்காரம் அவரது அழகை மெருகூட்டி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











